Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையினால் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நிகழ்வு

(திருக்கோவில்  நிருபர்-ASK) திருக்கோவில் ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணியானது கடந...




(திருக்கோவில்  நிருபர்-ASK)

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணியானது கடந்த 2019.02.10 திகதி   ஞாயிற்றுக்கிழமை  திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.


இவ் விழிப்புணர்வு பேரணியானது திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் பீ.மோகனகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் விழிப்புணர்வு பேரணியானது புற்றுநோய் தாக்கம் தொடர்பான விழிப்புணர் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பேரணியானது திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி தம்பிலுவில் மத்தியசந்தை வரைச் சென்று பொது நூலகத்திற்கு முன்னாக பொது மக்களுக்கான விழிப்புணர்வு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இவ் பேரணியில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பீ.மோகனகாந்தன், சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சுலோசனா இராஜேந்திரா, திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன், திருக்கோவில் பிரதேச செயலக கிராம நிர்வாக அதிகாரி கண.இராஜரெத்தினம் ஆகியோர் பொது மக்களுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

மேலும் இவ் விழிப்புணர்வு பேரணியில் பாடசாலை அதிபர், மாணவர்கள் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் தாதியர்கள் குடும்பநல உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்த கொண்டு இருநதனர்.