[MN_Sathu] திகோ/ தம்பட்டை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2019 யின் இறுதி நாள் நிகழ்வு கடந்த ஞாயிற்ற...

[MN_Sathu]
திகோ/ தம்பட்டை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2019 யின் இறுதி நாள் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை 2019.02.03 திகதி அன்று பாடசாலைக்கான மைதானத்தில் வித்தியாலய அதிபர் திரு M. சிவானந்தா தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு V.குணாளன் அவர்களும் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் H.நைரூஸ்கான், தமிழ் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு S. விநாயகமூர்த்தி, திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகார திரு S.M.சதாத் விசேட அதிதிகளாக ஓய்வுபெற்ற முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு இராசமாணிக்கம் மற்றும் தற்ப்போதைய திருக்கோவில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.சோ.இரவீந்திரன், ஓய்வுபெற்ற காதாரம் மற்றும் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு A.செல்வராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது 512 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தினை சேரர் இல்லமும், 478 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினை பாண்டியன் இல்லமும், 452 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தினை சோழர் இல்லமும் பெற்றுக்கொண்டன.