திருக்கோவில் பிரதேச பொலிஸ் நிலையத்திற்கான சகல வசதிகளையும் கொண்ட புதிய பொலிஸ் நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திருக்...
இந்நிகழ்வு சர்வமத குருமார்களின் வழிபாடுகளுடன் ஆரம்பமானதுடன் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.டி.கே.எஸ்.ஜெயசேகர அவர்கள் வருகை தந்து அடிக்கல்லினை நாட்டி வைத்துள்ளார். இவ் புதிய கட்டடமானது பொலிஸ் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக சுமார் 09 கோடி ரூபாய் செலவில் ஒரு வருட காலத்திற்கு நிர்மாணிக்கப்பட்ட திறந்து வைக்கப்படவுள்ளது.
இவ் பொலிஸ் நிலையமானது 1975ஆம் ஆண்டு நடமாடும் நீதிமன்றமாக ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வந்த நிலையில், 1984.09.18 ஆம் திகதி நீதிமன்றம் இயங்கிக் கொண்டு இருக்கும் போது கிராம சேவகர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் மூடப்பட்டு, 1990.10.01 திருக்கோவில் பொலிஸ் காவல் நிலையமாக மாற்றப்பட்டதுடன் 2003.06.01 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக வர்த்தமானி வெளியிட்டின் மூலம் திருக்கோவில் பொலிஸ் நிலையமாக இயங்கி வருகின்றது.
மேலும் இந்நிகழ்வில் அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் பி.ஜே.னுவன் வெதசிங்க, மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த விஜயசேகர,அம்பாறை-01 பொலிஸ் அதிகாரி டி.டி.எஸ்.சூரிய ஆராட்சி, பொத்துவில், அக்கரைப்பற்று பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.ஜீ.என்.ஜெயசி, பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்கர் பி.மோகனகாந்தன், திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.