Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதி தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி எஸ். குணபாலன் தெரிவாகியுள்ளார். புதிய பீடாதிபதி தெரிவு,...


தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி எஸ். குணபாலன் தெரிவாகியுள்ளார். புதிய பீடாதிபதி தெரிவு, தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (22) உப வேந்தர் கலாநிதி எஸ்.எம். முகம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.


கலாநிதி எஸ். குணபாலன் 19 வாக்குகளையும் இவரோடு போட்டியிட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். அப்துல் ரவூப் 9 வாக்குகளையும் பெற்றனர். வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி எஸ். குணபாலன் இப்பீடத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு தலைவராகவும் இருந்து வருகின்றார். இவரோடு போட்டியிட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். அப்துல் ரவூப் இதே பிடத்தின் கணக்கியல் பிரிவின் தலைவராகவும் இருந்து வருகின்றார்.