மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு கொடி தினம் வினாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் 2015.02.17 செவ்வாய்க்கிழமை இன்று காலை 9.30...

மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு கொடி தினம் வினாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் 2015.02.17 செவ்வாய்க்கிழமை இன்று காலை 9.30மணியளவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல முகாமைத்துவபணிப்பாளர் திரு.கண.இராஜரெத்தினம் இடம் பெற்றது. இன்நிகழ்வில் திருக்கோவில்,பொத்துவில் பிரதேச கல்விப்பணிப்பாளரும், திருக்கோவில் பிரதேச இந்துமான்ற தலைவருமான திரு.V.ஜெயந்தன் மற்றும் திருக்கோவில் பிரதேச ஆலயங்களின் அறங்காவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், குருகுல மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் குருகுல பணிப்பாளர் கண.இராஜரெத்தினம் இந்துமாமன்ற தலைவரிற்கு அணிவித்ததுடன், இந்துமான்ற தலைவர் ஆலய அறங்காவர் மற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கு அணிவித்திருந்தார்.