Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்னாள் நிர்வாகத்தினால் செய்து முடிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள்

தகவல் வே.லோகநாதன் முன்னாள் வண்ணக்கர் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயம். திருக்கோவில்.  அருள் மிகு திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாம...


தகவல்
வே.லோகநாதன்
முன்னாள் வண்ணக்கர்
ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயம்.
திருக்கோவில். 

அருள் மிகு திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் நிர்வாக சபையானது கடந்த 2008.08.31ம் திகதி தெரிவு செய்யப்பட்டு ஆலய நிர்வாகத்தினை பொறுப்பேற்ற வேளை கடந்த 10 வருட காலமாக நிர்வாகத்தினை நடாத்தி ஆலயத்தினை எவ்விதமான வேலைத்திட்டங்களும் செய்யாமல் ஆலயப் பணத்தினை வீண் விரயம் முறையான பணத்தினை செலவு செய்யாமல் நாங்கள் நிர்வாகத்தினை பொறுப்பேற்ற வேளை வங்கியின் இருப்பாக (25907.50) இருபத்தையாயிரத்து தொழாயிரத்து ஏழு ரூபா. ஐம்பது சதம்  மாத்திரமே இருந்தது. இப் பணத்தை எடுத்துச் செலவு செய்யாமல் ஆரம்பித்தஎமது பணியானது கடந்த 2012.06.17ம் திகதி வரையும் மூன்று ஆடி அமாவாசை தீர்த்த உற்சவத்தினை நடாத்தி உள்ளோம். இக்காலப்பகுதி வரையும் எம்மால் 12390202.00 ஒரு கோடியே இருபத்துமூன்றுலெட்சத்து தொண்ணூறயிரத்து இருநூற்று இரண்டு ரூபாவினை சேமித்துக் கொள்ள முடிந்தது. (அர்ச்சனை வரவு நாணவிதவரவு, நன்கொடை வரவு, காணி வரவு, கடைவீதி வரவு) இப்பணத்தினைக் கொண்டு  நாங்கள் பின்வரும் வேலைத்திட்டங்களை மிகவும் சிறப்பாக செய்து முடித்தது மட்டுமல்லாது மீதிப் பணமாக வங்கியில் 2372210.00 (இருபத்தி மூன்று லெட்சத்து எழுபத்திரெண்டாயிரத்து இருநூற்று பத்து ரூபா) சேமித்தும் உள்ளோம். எமது காலத்து நிருவாக உறுப்பினர்கள் மிகவும் பொறுப்புணர்வுடனும் திறமையாகவும் செயற்பட்டு வந்துள்ளனர். வண்ணக்கர் என்ற நிலையில் எனது பங்களிப்பு மிகவும் கூடியதாகவும் அனேகமான வேலைத்திட்டங்கள் எனது தனி முயற்சியினால் செய்து முடிக்கப்பட்டது  என்பதனை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுகின்றேன். இன்னும் பல வேலைத்திட்டங்களை செய்து முடிக்கவும் ஆலயத்தின் காணிகளை மீண்டும் தேடி அவற்றுக்கான ஆதாரங்களை தேடவும் உள்ளோம்.
எம்மால் முன்னேடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் : 
1. கடந்த 2004 சுனாமி அனர்த்தத்தின் போது முற்றாக சேதமான ஆலய வெளிமதில் சுவர் ஒருபகுதி கட்டி முடிக்கப்பட்டது.
2. பிள்ளையார் ஆலய முன்மண்டபம் கொங்கிறீட் போடப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
3. ஆலய இராஜகோபுரத்துக்கு ஒரு தொகை பணம் கொடுக்கப்பட்டது.
4. வசந்த மண்டபத்தின் முன் மண்டபம் பெரும் வேலைப்பாடுகளுடன் கட்டி கொங்கிறீட்  போட்டு கட்டப்பட்டது. 
5. ஆலய சுற்றுக் கோட்டம் கட்டி கொங்கிறீட்  போடுவதற்கு தூண்கள் அனைத்து போடப்பட்டுள்ளது.
6. ஆலய கபடா வீடு முற்றாக திருத்தி அமைக்கப்பட்டு கூரையும் திருத்தப்பட்டுள்ளது.
7. ஆலய nவி வீதியில் அன்னதானம் கொடுப்பதற்கு ஒரு பெரும் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
8. ஆலய திருவிழாகாலத்தில், பொலிஸ்நிலையம், பிரதேசசெயலகம், சுகாதாரப்பிரிவுகளுக்காக காரியாலயம் கட்டப்பட்டுள்ளது.
9. அனைத்து மதில் சுவர்களுக்கும் இரும்புகேற் போடப்பட்டுள்ளது.
10. ஆலய சுவாமி வாகனங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
11. இவ் ஆலயத்திற்கு சொந்தமான வயற்காணிகளுக்கு இதுவih காலமும் எவ்வித ஆவணங்களும் இல்லாதிருந்ததை கருத்தில் கொண்டு அனைத்து காணிகளையும் நிலஅளவையாளர்களைக் கொண்டு அளந்து படங்கள் கீறி உறுதிகளும் எழுதியுள்ளோம்.
12. ஆலயத்திற்கு சொந்தமான துறை நீலாவனையில் உள்ள குயவன்வெளி காணி விடயமாக சட்டத்தரணிகள் மூலம்  நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
13. ஆலயத்திற்கு சொந்தமான வயற்காணிகளுக்கு எல்லைகளாக ஆலய இலச்சனை பொறிக்கப்பட் கற்தூண்களை நாட்டியும் உள்ளோம்.
14. ஆலய வயற்காணியில் சில வயற்காணிகளை கவுண்டி மெசின் மூலம் திருத்தம் செய்யப்பட்ட மேலதிகமாக பல ஏக்கர்களை தயார்படுத்தியும் உள்;ளோம்.
15. ஊரக்கை வெளி காணியை கவுண்டி மெசின் மூலம் திருத்தம் செய்துள்ளோம்.
16. ஆலயம் அமைந்துள்ள இடம், ஆலய அர்சனைகள் இல்லம் மடத்துவளவு இவைகளுக்கு இது கால வரை எவ்வித ஆவனங்களும் இல்லாதது அறிந்து அவை அனைத்தையும் நில அளவையாளர்களைக் கொண்டு அளந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். 
17. பள்ளவெளி காணியில் அணைக்கட்டினைக் கட்டுவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கின்றோம்.
18. காஞ்சிரன் குடா மும்மாரி கண்ட காணிக்கான நீர்பாய்ச்சல் வாய்கால் பிரச்சினை சம்பந்தமாக நீர்பாசன உயர் அதிகாரிகளை சந்தித்து விண்ணப்பம் கொடுக்கப்பட்டதற்கு அமைவாக இவ் வாய்க்காலை வெட்டுவதற்கு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் வேலைத்திட்டங்களை செய்து முடிக்கப்பட்டதன் பின்பு மீதிப்பணமாக (2372210.00) வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ளது என்பதனை மிகவும் மனமகிழ்ச்சியுடன் அறியத்தருவதுடன் இன்னும் பல வேலைத்திட்டங்களை செய்து முடிக்க வேண்டும் மென்பது எமது நிருவாகத்தினரின் அவாவாக உள்ளது என்பதை சகல பொது மக்களுக்கும் அறியத்தருகின்றேன்.

தகவல்
வே.லோகநாதன்
முன்னாள் வண்ணக்கர்
ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயம்.
திருக்கோவில்.