Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

பத்தினி தெய்வம் கண்ணகி....

ஒருமா பத்தினி வந்தாள்-உல கேளுந் தழைத்திட வந்தாள் வந்தாள் கொற்றவன் செல்வ மழித்த கோபம் கோல மழகிய மாதே யாறாய்.... மாதவிக்கு பொன் தோற்று வாழ் வ...

ஒருமா பத்தினி வந்தாள்-உல
கேளுந் தழைத்திட வந்தாள் வந்தாள்
கொற்றவன் செல்வ மழித்த கோபம்
கோல மழகிய மாதே யாறாய்....
மாதவிக்கு பொன் தோற்று
வாழ் வணிகர் தம்முடனே...
காதலித்து பின்போன
கன்னி குளுந்தருள்வாய்....
தென்னம் பழம்சொரிய
தேமாங்கனி யுதிர
வன்னி வழி நடந்த
மாதே குளுந்தருள்வாய்....
எச்சேரி வெந்தாலும்
இடைச்சேரி வேகாமல்
உன் முலை குளுந்தாற்போல்
நீயும் குளுந்தருள்வாய்....
இந்த குளுத்திப் பாடல்களே இன்று கண்ணகி அம்மன் 
கோவில்களில் அம்மனை  சாந்தப் படுத்த பாடப்படுகின்றது.
பத்தினி தெய்வம், பத்கினி தெய்யோ, என்று இலங்கையில் 
போற்றி வணங்கப்படுகின்ற கண்ணகி முற்காலத்தில் இந்தியக் 
துணைக் கண்டத்தில் காவிரிப்பூம் பட்டினத்தில் மாநாய்க்கன் என்ற
வணிகன் கடலில் கண்டெடுத்து வளர்த்து, மாசாத்துவன் என்ற
மற்றொரு வணிகனின் மகனான கோவலன் என்பவனுக்கு மணம்
செய்து கொடுத்தான் என்பது வரலாறு. கற்புக்கரசி, கண்ணகி அம்மன்
என்று பெரும்புகழ் படைத்த இப் பத்தினித் தெய்வம் "கண்ணகை அம்மன்"
என்ற பெயரோடு மட்டக்களப்பு பிரதேசத்திலே குடிகொண்டுவிட்டாள்.
இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தில் வருகின்ற கண்ணகி என்னும் பெயர் 
இப்பகுதியிலே "கண்ணகை" அம்மன் என்ற சிறந்த பொருள் கொண்டதாக 
திரிபு பெற்றுள்ளமையை பார்க்கலாம். கண்-நகை என்ற இரு சொற்களின் சேர்க்கையே 
கண்ணகை ஆனது. கண்ணின் ஒளி, கண்ணின் அணிகலன் என்ற பொருள் என்று
இது கருதப்படுகிறது. மதுரையை எரித்த காரணமாக கோபப் பொறிபறந்த கண்களுடன் 
கண்ணகி இருந்தாள் என்பதும் ஆராய்ந்து பார்க்கக்கூடியது.
வைகாசிமாத வளர்பிறை நாட்களிலே நடைபெற்ற இந்த சடங்கு இன்றைய
குளுர்த்தியுடன் நிறைவுபெறுகிறது. ஆண்டு முழுதும் பூட்டப்பட்டு கிடக்கும்
கண்ணகி அம்மன் கோவில்கள் "கதவு திறத்தல்" என்ற ஆரம்ப நாளுடன்
திறக்கப்பட்டு தொடர்ந்து மதிய, இரவுப் பூசைகளுடன் திருவிழாக்களுடன்
நடைபெற்று இன்று முடிவடைகிறது.
தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோவில்தான் மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள
கண்ணகி அம்மன் கோவில்களில் மிக பழமை வாய்ந்ததாக இருக்க முடியும்
என்று துணிவதற்கு உடுக்குசிந்தின் 71 ம் பாடல் சான்றாகிறது.
"பட்டிநகர் தம்பிலுவில், காரைநகர்,வீரமுனை
 பவிசுபேறு கல்முனை, கல்லாறு,மகிழூர்,எருவில்
 செட்டிபாளையம், புதுக்குடியிருப்பு செல்வ
 முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை,
 அட்டதிக்கும் புகழு வந்தாறுமூலை
 அன்பான சிற்றாண்டி நகரதனில் உறையும்
 வட்டிவப் பூங்குழல் மன்முனைக் கண்ணகையை
 மனதினில் நினைக்கவினை மாறியோ டிடுமே"............என்று பாடப்பட்டுள்ளது.
இப்படி எமது கிழக்கு மாகாணம் முழுவதும் ஊரூராய் கோவில்கொண்ட
பத்தினி தெய்வம் கண்ணகிக்கு முதன்முதலில் பக்திப்பாடல்கள் பாடி
வெளியிட்டவர்களும் நமது ஊர்க்கலைஞர்களே.
அம்மனின் புகழுரைக்கும் வழக்குரை காவியம், குளுத்திப்பாடல், வசந்தன் கவிகள்,
உடுக்குசிந்து போன்ற நூல்கள் இருந்தாலும், தற்போதைய இளையோருக்கு 
அம்மனின்
 புகழ்பற்றி  பக்திப் பாடல்கள் மூலம் சொல்வதே நல்ல அணுகுமுறையாகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------

கோவலனின் கண்ணகியே எங்கள் குறைகள் கேளம்மா....
கோபம் இனி வேண்டாம் இரு கண்கள் பாரம்மா..
ஓராயிரம் கண்ணாள் எங்கள் கண்ணகி அம்மாள்
அன்னை ஆதி சக்தியின் அவதாரமல்லவா.....
அரகரோகரா அரகரோகரா அம்மனுக்கு அரகரோகரா...
மழையேதுமில்லை வெயில் அனலானதம்மா....
மாதம் மூன்று மாரி பொழிய வேண்டும்..
வளமான வயல்கள் பாலை வனமானதமா..
வசந்த வாழ்வை மனமிரங்கி தருவாய்....
நீ ஏடகமமர்ந்து தாயே ஊர்வலம் வந்தால்
ஊரில் வேற்றுமை இல்லை நாங்கள் ஒரு தாய் பிள்ளை..
மாசாத்துவானின் மருமகளாக வந்து...
மாதர்குல மாணிக்கமாய் வாழ்ந்தாய்
மணவாளன் மீது வீண்பழி வந்தபோது
மதுரை நகரை பார்வையாலே எரித்தாய்
நீ பத்தினி தெய்வம் பார் போற்றிடும் அம்மன்
கோவில் கப்புகனாராய் வந்து வாக்கு தா அம்மா