Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

பார் போற்றும் பத்தினி தெய்வம்....

கண்ணிலே கோபம் கையிலே சிலம்பு பார்த்தோம் உன் கோலம்தான்... குளிர்த்திப் பாடல் பாடி பாடி.. தணிப்போம் உன் கோபம்தான்....   ஊர்கள் ஒ...

கண்ணிலே கோபம் கையிலே சிலம்பு
பார்த்தோம் உன் கோலம்தான்...
குளிர்த்திப் பாடல் பாடி பாடி..
தணிப்போம் உன் கோபம்தான்....
 
ஊர்கள் ஒன்று திரண்டு வந்து
வணங்கும் உன்னைத்தான்...
உன் கோவில் வீதி தோறும் பொங்கல்
பொங்கி படைக்கும் உனக்குத்தான்
 
வைகாசி திங்கள் உன் வாசல்தேடி
வந்தோம் எம் தாயே அம்மனே...
கைராசி மிக்க தாய் நீ என்று
உன்னை பாடி வைப்போம் அம்மனே....
 
மழைகொடுக்கும் மேகம்போல்..
அருள்சுரக்கும் ஊற்று நீயே அம்மா....
எங்கள் துயர் துடைக்கும் தாயே
கண்பாரம்மா   அம்மா கண்பாரம்மா....
 
பத்தினி தெய்வம் நீயென்று பாரே போற்றுதே...
பாண்டிய தேசம்கூட உன்பார்வைபட்டு
சுற்றிச்சுழன்றதே பின்பு பற்றி எரிந்ததே
தாயே பற்றி எரிந்ததே தீ பற்றி எரிந்ததே
 
அலையும் எங்கள் நெஞ்சை அடக்கும்
அங்குசம் உன் கண்கள்தான்...
ஆண்டுதோறும் வைகாசி பொங்கல் வைக்க
ஏங்கும் எங்கள் உள்ளம்தான்...