Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

அம்மாமார் தினம்...

அம்மாமார்களை அவர்கள் பிள்ளைகள் நன்றியுணர்வோடு நினைவு கூரும் ஒரு நாளாக இன்றைய நாள் அமைகிறது. பத்துமாதங்கள் சுமந்து தங்களை பெற்றெடுத்து, ...

அம்மாமார்களை அவர்கள் பிள்ளைகள் நன்றியுணர்வோடு
நினைவு கூரும் ஒரு நாளாக இன்றைய நாள் அமைகிறது.
பத்துமாதங்கள் சுமந்து தங்களை பெற்றெடுத்து, பல கஷ்டங்களை
உள்வாங்கி தங்களை வளர்த்து ஆளாக்கிவிட்ட அம்மாக்களை
மனமார வாழ்த்தி நன்றி கூறும் நாளாகவும் இன்றைய நாள்
பார்க்கப்படுகிறது.
அதிகமான நாடுகளில் அம்மாக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்கா, ஆவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, இந்தியா போன்ற
பெரிய நாடுகளிலும் இந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
ஒவ்வொரு வருடமும் மேமாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில்
இந்த அம்மாக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
சீமாட்டிகள் ஜூலியா வார்ட் ஹோவே, அன்ன ஜார்விஸ் ஆகிய இருவரின்
முயற்சியினாலும், உழைப்பினாலும்தான் அம்மாக்கள் தினம் உருவானது.
இவர்கள் கொண்டுவந்த இந்த தீர்மானத்தை முந்நாள் அமெரிக்கா ஜனாதிபதி
வூட்ரோவ் வில்சன் அவர்கள் 08 . 05 .1914  அன்று  கைச்சாத்திட்டு அமுல்படுத்தினார்.
அன்றிலிருந்து இன்றுவரை அம்மாக்கள் தினம் அம்மாமாருக்காக அர்ப்பணிப்போடு
கொண்டாடப்படுகிறது.