Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

மனிதர்களாக வாழ்வோமே...

எல்லாமே இந்த உலகிலே நிலையற்றது. அனைத்துமே மாயை. சூரியனுக்கு கீழே மனிதர் படுகின்ற எல்லா பிரயாசங்களுக்கும், கஷ்டங்களுக்கும் பலன் என்ன?...

எல்லாமே இந்த உலகிலே நிலையற்றது. அனைத்துமே மாயை.
சூரியனுக்கு கீழே மனிதர் படுகின்ற எல்லா பிரயாசங்களுக்கும்,
கஷ்டங்களுக்கும் பலன் என்ன?  ஒன்றுமில்லை .. ஆனால் 
ஒருசந்ததி போகும், மறு சந்ததி வரும். சூரியனுக்குக்கு கீழே
நடக்கின்ற சகல காரியங்களும் மாயைதான். அத்தோடு தப்புகளும்,
பொய்யும், புரட்டும் எங்கும் பரவிக்கிடக்கிறது. மனிதர், மனிதர்களாக
வாழ்வதில்லை. இவர்கள் கடவுளையும் ஏமாற்றி, தங்களையும் ஏமாற்றியே
இந்தப் பூமிப் பந்தில் வாழ்கின்றார்கள். நிலையில்லாத இந்த உலகிலே
வாழும் காலத்திலாவது நாம் நல்லபடியாக வாழ்ந்து மடியலாமே..
அதற்கு என்ன செய்ய வேண்டும். ஒன்றும் பெரிதாக செய்யத் தேவையில்லை.
ஆனால் சில உறுதிகளைமட்டும் நாம் எடுத்துக்கொண்டால் அந்த நல்ல
இலக்கை அடையலாம். குறிப்பாக இளையோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய
சில உறுதி மொழிகள்.
1 , மிகவும் அவசியமாக இருந்தால் மட்டும் பொய் பேசுவேன். சாதாரண 
     விசயத்துக்கெல்லாம் பொய் பேசமாட்டேன்.
2 , யாரையும் ஏமாற்ற மாடன்.
3 , யாருக்கும் கஷ்டத்தைக் கொடுக்கமாட்டேன்.
4 ,  யாருக்கும் கெட்டதை சொல்லமாட்டேன்.
5 ,  நன்றாக இருப்பவர்களைப் பார்த்து பொறாமைப்படமாட்டேன்.
6 , தவறான வழியில் வரும் பணத்திற்கு ஆசைப்படமாட்டேன்.
7 , எந்தத் தவறான வழிக்கும் போகமாட்டேன்.
8 , என் வேலையை உண்மையாக, ஒழுங்காக செய்வேன்.
9 , பெற்றோருக்கு மரியாதை கொடுப்பேன்.
10 இன்றைக்கு என்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு
     செய்வேன்.
இப்படி நல்ல உறுதிமொழிகளை நீங்களாகவே சிந்தித்து அவற்றை
உங்கள் வாழும் காலத்தில் கடைப்பிடித்தால் நீங்கள் மனிதர்களாக
வாழலாம். இந்த மண்ணை விட்டு மறையும்போது புனிதர்களாக
மறையலாம்.