Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

திருக்கோவில் பிரதேசத்தில் காயத்திரிபுரம் 159வது வீட்டுத் திட்டம் அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களினால் திறந்து வைப்பு

(திருக்கோவில் நிருபர்- ASK & NR) திருக்கோவில் பிரதேசத்தில் காயத்திரிபுரம் 159வது வீட்டுத் திட்டம் அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களினா...



(திருக்கோவில் நிருபர்- ASK & NR)

திருக்கோவில் பிரதேசத்தில் காயத்திரிபுரம் 159வது வீட்டுத் திட்டம் அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களினால் திறந்து வைப்பு



திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் வீடற்ற 35 குடும்பங்களுக்கான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட 159வது காயத்திரிபுரம் வீடமைப்பு தொகுதியை அமைச்சர் சஜீத் பிரமதாச அவர்களினால் வைபவ ரீதியாக கடந்த சனிக்கிழமை 2019.01.26 திகதி அன்று  திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இவ் வீடமைப்பு தொகுதி திறப்பு விழாவில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ சஜீத் பிரேமதாச அவர்கள், கிழக்கு மாகாணசபை தவிசாளர் சந்திரதாஸ கலப்பத்தி, மாகாணசபை மன்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் ஹரிஸ் முன்னாள் அமைச்சர் பி.தயாரதன, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.பண்டார திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன், உபதவிசாளர் எஸ்.விக்னேஸ்வரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அமைப்பாளர்கள் அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் திருக்கோவில் காயத்திரிபுரம் வீடமைப்பு தொகுதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இவ் காயத்திரிபுரம் வீட்டுத் திட்டமானது ஜந்து ஏக்கர் நிலப்பரப்பில் தலா ஒரு பயனாளிக்கு 10பேர்சஸ் காணியில் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரின் வழிகாட்டல்களின் ஊடாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ சஜீத் பிரேமதாச அவர்களின் யாவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் விசேட பங்களிப்புடன் காயத்திரிபுரம் வீடமைப்பு தொகுதி அமையப் பெற்றுள்ளதுடன் திருக்கோவில் பிரதேசத்தில் அமைச்சர் கௌரவ சஜீத் பிரேமதாச அவர்களின் யாவருக்கும் வீடு என்ற இரண்டாவது 35குடுப்பங்களுக்கான வீட்டுத்திட்ட தொகுதியாக காயத்திரிபுரம் வீட்டுத்திடம் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் 100 பேருக்கு ஒரு கோடி ரூபா பெறுமதியான விசிறி கடன்களுக்கான காசோலைகள், ஒரு இலட்சம் பெறுமதியான சமித்துரு வீடமைப்பு உதவிக்கான காசோலைகள், 100 பேருக்கு 2கோடி பெறுமதியான சொந்துருபியச கடனுக்கான காசோலைகள், கலைஞர்களுக்கான மருத்துவ உதவிக்கான காசோலைகள், மூக்கு கண்ணாடிகள் காணி உறுதிப்பத்திரங்கள் போன்ற உதவிகளும் அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களினால் இன்றைய நிகழ்வின் போது வழங்கப்பட்டன.