Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

திருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள்

(ASK) அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் மீக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் குன்றும் குழியுமாக க...



(ASK)

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் மீக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்ட வீதிகள் மன்றும் பாடசாலை மைதானங்கள் , இந்து ஆலயங்கள் என பல்வேறு புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் சுமார் ஒரு கோடியே 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இதனடிப்படையில் அரசாங்கத்தின் கம்பறலிய வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் கிராமத்தில் 04வீதிகளும், தம்பிலுவில் கிராமத்தில் 02வீதிகளும், விநாயகபுரம் கிராமத்தில் 02வீதிகளுமாக 08 வீதிகளுக்கும் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் பழைய தபாலக வீதியில் இடம்பெற்று வரும் கொங்ரீட் இடும் வேலைகளை திருக்கோவில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தி.மோகனகுமார், தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ்.சுந்தரம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஜனார்த்தனம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஜெயச்சந்திரன் ஆகியோர்  29.11.2018 வியாழக்கிழமை அன்று  நேரில் சென்று வேலைத்திட்டங்களை பார்வையிட்டுள்ளனர்.

இவ்வீதிகள் ஊடாக மழைக் காலங்களில் பாடசாலை மாணவர்கள் உட்பட கிராம மக்கள் கடந்த பல வருடங்களாக மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பிரயாணம் செய்து வந்ததாகவும் இதனை புனரமைப்பதற்கு உதவிய பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கு நன்றிளை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.