Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

தற்கொலை பிரச்சினைக்கு தீர்வாகாது

(ந.கோவேந்தன்) தற்கொலை என்பது ஒருவர் தன்தைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும் இந்த தற்கொலை காலத்துக்கு காலம் இலங்கையில் அதிகரித்த வண்...


(ந.கோவேந்தன்)

தற்கொலை என்பது ஒருவர் தன்தைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும் இந்த தற்கொலை காலத்துக்கு காலம் இலங்கையில் அதிகரித்த வண்ணமாகவே காணப்படுகின்றது தற்கொலை உண்மையில் பிரச்சினைக்கு தீர்வாகாது ஏனெனில் இலங்கையில் பலர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு தற்கொலைதான் என என்னுகின்றனர் இதனால்தான் தற்கொலை என்பது கூடுதலாக இடம் பெறுகின்றது.இலங்கையில் தற்கொலை ஏற்படுவதற்கான காரணங்களை பார்ப்போமாக இருந்தால் காதல் பிரச்சனைகள்,கடன்பிரச்சனைகள்,குடிப்பழக்கம்,இயலாமை,பாரியநோய்க்கு உள்ளாகுதல்,பரீட்சையில் சித்தியடையாமை,குடும்பப்பிரச்சனை,குற்றவுணர்வு........... இவ்வாறான பல காரணங்களால் இலங்கையில் தற்கொலையானது இடம் பெறுவதைக் காணலாம். இவ்வாறான பிரச்சனைகளுக்கெல்லாம் தற்கொலைதான் சரியான தீர்வு என சிலர் எண்ணுவதனால்தான் தற்கொலை என்பது அதிகரித்த வண்ணமே உள்ளது.

உண்மையில் பிரச்சனைக்கு தீர்வு தற்கொலையாகாது என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து செயற்பட வேண்டும்.ஏனென்றால் பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை இல்லை பிரச்சினையே வாழ்க்கையும் இல்லை எனினும் நம்பிக்கைத்தூரோகத்திற்கு உயிர்களைமாய்ப்பதுதான் தீர்வென்றால் பிறந்த குழந்தைமுதல் சகலருமே ஒவ்வொரு நாளும் உயிரைப் பலமுறை மாய்த்துக் கொள்ள வேண்டும்.

வாழ்வதற்கு உதவியவர்களை ஏமாற்றக்கூடாது ஏமாதுவிட்டோம் என்பதற்காக வாழ்க்கையை வெறுக்கக் கூடாது இவ் உயிர் உன்னுடையது அல்ல அதை பலவந்தமாய் உன்னால் பிடுங்கிக்கொள்ள முடியாது.அடுத்தவர்களின் உயிர்களை பிடுங்கவும் முடியாது.இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழபழகிக்கொள்ள வேண்டும்.

'நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்' எனக் கூறுவார்.அப்துல்க்கலாம் இது சாதாரண விடையம் இல்ல பெரிய சவால் சரித்திரம் படைக்கும் மரணத்தை தழுவுவது சில சாதைனையாளர்களுக்கு மட்டும் சாத்தியம்.இயற்கையாக மரணம் வருவதோ ஒப்புக்கொள்ளக் கூடியது.மனமுடைந்து இந்த வாழ்க்கையோ உறவுகளோ வேண்டாம் என்று தற்க்கொலை செய்து கொள்வது எந்த மனிதனுக்கும் நிகழக் கூடாது.

'நிலையானது மரணம் நிலையில்லாதது வாழ்க்கை' என்றெல்லாம் தத்துவம் பேசினாலும் இன்னுமொருமுறை இந்த மனிதப்பிறவி நமக்கு வாய்க்குமா? என்பது நம்மில் யாருக்கும் தெரியாது.எனவே தொளிவான சிந்தனை உள்ளவர்கள் யாரும் தற்கொலை என்கின்ற முடிவை கையில் எடுக்க மாட்டார்கள்.

மரணம் சோகமானது அதனிலும் தற்கொலை மிகவும் சோகமானது தற்கொலையின் முடிவு அவர்களை மட்டுமல்ல சுற்றியிருக்கும் அனைவரையும் பாதிக்கும் சில பாடல் வரி ஊடாகவும் பிரச்சனைக்கு தீர்வு தற்கொலை அல்ல என்பது வருகின்றன.

'மயக்காமா கலக்கமா மனதிலே குழப்பமா,

வாழ்க்கையில் நடுக்கமா'

'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதிவரைக்கம் அமைதி இருக்கும்' எனும் சிலவரிகள் உணர்த்துகிறது.

இலங்கையில் நாளொன்றுக்க சராசரியாக 8 பேர் தற்கொலை செய்கின்றார்கள் இலங்கை ஒருமூவினம் சிங்களவர்,தமிழர்,முஸ்லீம் என உள்ளனர் இவர்களுள் தமிழர்களே அதிகம் தற்கொலைசெய்து கொள்கின்றனர்.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 ஆம்,2016 ஆம் ஆண்டுகளில் 2323 தற்கொலை முயற்சிகள் இடம் பெற்றுள்ளது என தொழில்சார் உளநல உதவிநிலையம் கூறுகிறது.

அனுபவசாலிகளான பெரியவர்கள் 'போன பிறவியில் என்ன பாவம் செஞ்சனோ இப்படி அவதிப்படுகிறேன் இந்தப்பிறவிலேயே பட வேண்டிய எல்லாம் பட்டு அத்தனை எல்லா கஸ்ற்றத்தையும் அனுபவிச்சிட்டு போயிடுறேன்' என எளிதாக எடுத்துக்கொண்டு விடுவார்கள் எத்தனையோ இன்னல்களில் கரைந்து போனாலும் இயல்பான மரணத்தை எதிர்கொள்ள தயாராகுவதுதான் மனித இயல்பு ஒரு மனிதன் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் நிலைக்குபோகிறான் என்றால் அவன் எவ்வளவு மனவேதனை அடைந்திருப்பான் என்கின்ற கேள்வி நிச்சயம் எழும் தீர்க்கவே முடியாத பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்பதே உண்மை.

ஒருவர் தற்கொலை செய்யப்போகிறார் என்பதற்கான சில ஆரம்ப அறிகுறிகள் வெளிப்படுவதுண்டு அவையாக தங்களுடைய தற்கொலை விருப்பத்தை யாரிடமாவது வேறுவழியில் தெரிவித்திருப்;பார்கள்,தங்களுக்கு வாழ்க்கையிலேயே மிக முக்கியம் எனக்கூறுகின்ற ஒரு பொருளை யாருக்கும் கொடுக்கமாட்டேன் என வைத்திருக்கும் பொருளை எளிதாக யாருக்காவது கொடுத்துவிட்டு விடை பெறுவது போன்ற தொனியில் தொலை பேசியில் பேசுவது,தற்கொலை குறிப்பு எழுதிவைப்பது, பதற்றமாக இருப்பது,எதிலும் ஈடுபாடு காண்பிக்காமல் இருப்பது.

இன்று படித்தவர்கள் முதல் பாமரமக்கள்வரை தற்கொலையில் ஈடுபடுவது சுலபமான விடயமாகிவிட்டது இவ்வாறான தற்கொலையை தீர்ப்பதற்கு சிலவழிகளும் உள்ளன அவற்றை பார்ப்போமானால் குழந்தைகளுக்கு பாடசாலையில் தோல்வியால் ஏற்படும் ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும்,அம்மா அப்பா இருவரும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டோடு பிள்ளைகளை வளர்க்க மவேண்டும்.உறவினர்களுடனான உறவைப் பேணுவது நண்பர்களுடன் அதிகமான நேரத்தை செலவிடுவது ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது,ஓய்வுகாலத்தைக்கூட பயனள்ள வகையில் ஏதாவது அமைப்போடு சேர்ந்து பணியாற்றுதல் மற்றவர்களுக்கு உதவி செய்வது என அர்த்தமுள்ளதாக வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவேண்டும்,பாடசாலையிலோ,பல்கலைக்கழகங்களிலோ,கல்லூரியிலோ மாணவர் ஆலோசனைக் குழுக்களை ஏற்படுத்தி உரிய மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

இலங்கையில் பல தற்கொலைமுறைகளும் தற்கொலைக்கான சில உபகரணங்களையம் கண்டுகொள்ளலாம்.கழுத்தில் கையிறினை மாட்டி தூக்கில் தொங்குவது பூச்சிக்கொல்லி மருந்தினை அருந்துவது,சில மாத்திரைகளை கூடுதலாகஉட்கொள்வது,கட்டுத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்வது,நீரில் மூள்கி உயிரை மாய்ப்பது,உயரமான கட்டிடங்களில் இருந்து கீழே விழுவது.... போன்ற பல தற்கொலைமுறைகள் இன்று இலங்கையில் இடம் பெறுகின்றது இவற்றை நாம் நேரடியாகவும் பார்த்திருப்போம் கேட்டும் அறிந்திருப்போம்.

எனவே பிரச்சனைக்கு தீர்வு தற்கொலையாகாது என்பதை உணர்ந்து செயற்படுவதுடன் தற்கொலை செய்ய முயற்சிக்கும் ஒவ்வொருவரும் முதலில் தன்னைப்பற்றி சிந்திக்கவேண்டும்,தம் பெற்றோர்களைப்பற்றி சிந்திக்க வேண்டும் நண்பர்களை பற்றி சிந்திக்க வேண்டும்,தம் உறவினர்களைபற்றி சிந்திக்க வேண்டும் இவ்வாறு எல்லா நபர்களையும் பற்றி சிந்திக்கின்ற வேளையில் நம்மிடம் ஏற்படும் தற்கொலை உணர்வு அகன்றுவிடும்.
ந.கோவேந்தன்

கல்வியியல் சிறப்புக்கற்கை

கிழக்குப்பல்கலைக்கழகம்.