Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

தாய்மார்களின் கண்ணீர் மழையில் கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லத்தில் 700 மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி

(ASK) தாய்மார்களின் கண்ணீர் மழையில் கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லத்தில் 700 மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செய்த்தப்பட்டது அம்பாறை...



(ASK)

தாய்மார்களின் கண்ணீர் மழையில் கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லத்தில் 700 மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செய்த்தப்பட்டது

அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்முறையும் தமிழர்களின் விடுதலைக்காக உயிர்நீத்த சுமார் 700 மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 06.05க்கு மூன்று முறை மணி ஒலிக்கப்பட்டு அம்பாறை விநாயகப்புரத்தினை சேர்ந்த மூன்று மாவீரர்களை பெற்ற தாய் கனகசுந்தரம் தில்லையம்மாவினால் பிரதான தீபச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏனைய தீபச் சுடர்கள் பெற்றோர்கள்,முன்னாள் போராளிகள் மற்றும் உறவினர்களினால் ஏற்றப்பட்டதுடன் ஒலிபெருக்கியில் மாவீரர்களின் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

இம்முறை அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழுவின் ஊடாக குட்டிமணி மாஸ்டர் எனப்படும் நாகமணி கிருஸ்ணபிள்ளை அவர்களின் தலைமையில் மேற்படி மாவீரர்களுக்கான தீபச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் உறவினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உயிர்நீத்த மாவீரர்களுக்காக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இம்முறை எழுச்சியான முறையில் மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் 27ந் திகதி செவ்வாய்க்கிழமைமாலை 06.05க்கு  700 மாவீரர்களுக்கான அஞ்சலிகள் செலுத்தப்பட்டது

இவ் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் கட்சிகளின் மேடைப்பேச்சுக்கு இடம் இல்லாத போதும் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

அம்பாறை கஞ்சிகுடியாறு துயிலும் இல்லத்தில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் மாவீரர் அனுஷ்டிப்புகள் இடம்பெற்று வந்தநிலையில் இறுதியாக 2006ஆம் ஆண்டு  தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்  நாட்டில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில் கடந்த வருடம் முதல் தடவையாக மாவீரர்களின் பெற்றோர்களால் கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள் துயிலும் இல்லத்தில் தீபம் எற்ற அஞ்சலி செலுத்தப்பட்டமையை தொடர்ந்து

இம்முறையும் புலனாய்வுத் துறையினர் மற்றும் அரச பாதுகாப்பு படையினரின்; பிரசன்னத்திற்கும் மத்தியிலும் அமைதியோடு மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.