கிழக்கின் முதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய புகழ்பாடும் பக்தி பாடல்கள் அடங்கிய இ...
இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக இந்தியா தபோவனம் ரிஷிகேசம் இமயமலை சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் , பிரதம அதிதியாக நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் டி.ஜே.அதிசயராஜ், திருக்கோவில் ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் திரு.பி.மோகனகாந்தன், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜயரூபன் ஆகியோருடன் உயர் அதிகாரிகள், கல்வியாளர் வர்த்தகர்கள், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் இலக்கிய ஆர்வளர்கள் கல்வியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
இவ் இறுவட்டானது திருக்கோவில் ஏ.எஸ்.கே.திருவதிகைக் கலைக்கூடத்தின் வெளியீடாக வருவதுடன் இறுவெட்டில் உள்ள அனைத்துப் பாடல்களையும் திரு. ஏ.எஸ்.கார்த்திகேசு அவர்கள் எழுதி ஆக்கியுள்ளதுடன் இசை பிரம்மஸ்ரீ.இரா.நீதிராஜசர்மா அவர்கள் இசையமைத்தள்ளதுடன் பாடல்களை கின்னஸ் பாடுநிலா உலகப்புகழ் எஸ்பி.பாலசுப்பிரமணியம், அவர்களும் ஸ்டான்லி (இந்தியா) நிவாசின் சக்திவேல் (இந்திய) நீதிராஜசர்மா நீ. குருபரன்சர்மா (இலங்கை) ஆகியோர் பாடியுள்ளதுடன் வெளியீட்டு விழாவினை திருக்கோவில் முருகன் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் திருக்கோவில் திருஞானவாணி முத்தமிழ் இசை மன்றம் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.