தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இவ்வருடம் 2018ன் திருக்குளிர்த்தி பெருவிழாவினை முன்னிட்டு நமது ஊரின் வளர்ந்து வரும் இளம் இசைக...

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இவ்வருடம் 2018ன் திருக்குளிர்த்தி பெருவிழாவினை முன்னிட்டு நமது ஊரின் வளர்ந்து வரும் இளம் இசைக்கலைஞர்களினால் தமது ஏற்பாட்டில் கண்ணகி அம்மனின் பாடல்கள் அடங்கிய "வருவாய் அம்மா வரம் தருவாய் அம்மா" பாடல் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று 25.05.2018 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகவில் இறுவெட்டானது ஆலய பரிபாலன சபையிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் முதலாவது பிரதி தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய கப்புகனார் திரு.க.தங்கத்துரை அவர்களுக்கும், இரண்டாவது பிரதியானது கண்ணகை அம்மன் ஆலய வண்ணக்கர் திரு மலரவன் அவர்களுக்கும், மூன்றாவது பிரதியானது கண்ணகை அம்மன் ஆலய தலைவர் திரு சண்முகம்பிள்ளை அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
மேலும் இவ் இறுவெட்டானது தம்பிலுவில் RN CD Home மற்றும் அம்மன் அச்சகம் தம்பிலுவில் இன் அனுசரணையில் கண்ணகி அம்மன் மற்றும் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் பாடல்கள் அடங்கி இவ் இறுவெட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ம.மேகசியாமளன், சு.சபேசன், ஆ.ஆருஜன், பா.பத்மியா , பா.பவ்யா, வ.சிதுசயோமி ஆகியோர் பாடியுள்ளனர். இதற்கு இசை அமைப்பினை க.பிரணவனும், செ.நேருஜனன் ஆகியோரும் இதற்கான பாடல் வரிகளை க.விஜிதரன் மற்றும் ச.சஞ்சிகா ஆகியோர் எழுதியுள்ளனர்
இவ் இறுவெட்டு வெளியீட்டுக்கு எமது தம்பிலுவில்.இன்போ(thambiluvil.info) இணையக்குழு ஊடகப்பங்களிப்பினை வழங்கியிருந்தது.
