Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு - வைத்தியசாலையை முற்றுகையிட்ட இளைஞர்கள்

[AKS , NR] திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பெரிய முகத்துவாரத்தில் பகுதியில் நேற்றையதினம் 15.04.2018 சனிக்கிழமை சம்பவி...



[AKS , NR]

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பெரிய முகத்துவாரத்தில் பகுதியில் நேற்றையதினம் 15.04.2018 சனிக்கிழமை சம்பவித்த மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உரிய சிகிச்சை பலன்  இன்றி மரணமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


விபத்தில் சிக்கிய குறித்த இளைஞனை உரிய நேரத்திற்கு மேலதிக சிகிச்சைகளுக்காக வேறு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கான நோயாளாா் காவு வண்டிக்கான சாரதி இல்லாது காலதாமதமாகியதன் காரணத்தினால் குறித்த இளைஞன் மரணமடைந்துள்ளதாக தெரிவித்து ஆத்திரம் கொண்ட நுற்றுக்கு மேற்பட்ட பிரதேச இளைஞர்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை நேற்று சனிக்கிழமை மாலை(14) முற்றுகையிட்டனர்.

இவ் பிரச்சினை தொடர்பாக கேள்வியுற்று வைத்தியசாலைக்கு முன்பாக திரண்ட இளைஞர்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையானது வெறுமனே பெயர் பலகையோடு மாத்திரம் இயங்குவதாகவும் ஆதார வைத்தியசாலைக்கான எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் இங்து பணிபுரிகின்ற உத்தியோகத்தர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது இல்லை இதன் காரணமாக தொடர்ந்து இப் பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் பாதிக்கப்படுவதோடு பலர் மரணமடைந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த வைத்தியசாலை சரியாக இயங்கவில்லையென்றால் இதனை முடிவிடுமாறும், வெறுமனே மக்களுக்கு பயனற்ற நிலையில் இந்த ஆதார வைத்தியசாலை இயங்க தேவையில்லை என்றும், இவ்வாறான பிரச்சினைக்கு விரைவாக செயற்பட்டு இவ்வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்தும் மௌனம் காக்காது, துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிரின் பெறுமதியை கருதி இனிமேலாவது தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திருக்கோவில் பிரதேச சபையில் தவிசாளர் இ.வி.கமலராஜனிடம் தெரிவித்தனர்.



இந்நிலையில் சம்பவத்தினை நேரில் பார்த்ததாக திருக்கோவில் பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.சதீஸ்குமார் கருத்து தெரிவிக்கையில்.......

தான் இந்த பிரச்சினை தொடர்பாக கதைப்பதற்காக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் கே.முருகாணந்தனை தொடர்பு கொண்ட போதும் அவர் தான் கல்முனையில் இருப்பதாகவும் வைத்தியசாலை நிர்வாகத்துடன் தொலைபேசியில் கதைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சாட்டுப்போக்கு கதைகளை கூறிக் கொண்டு தொடர்ந்தும் இந்த பிரதேச மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதமளிக்க முடியாத இந்த ஆதார வைத்தியசாலையை இல்லாது மூடிவிடுமாறும், சரியான முறையில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் வைத்திய சேவைகளை முன்னெடுக்குமாறு கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பொலிஸ் நிலையப் பதில் கடமை பொறுப்பதிகாரி எச்.எம்.பி. ஹேரத் இளைஞர்களை அமைதிப்படுத்தியதுடன் நாளையதினம் திங்கட்கிழமை 16ஆம் திகதி காலை 09 மணிக்கு வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும், அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக கருத்துக்களை அங்கு தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத் தருவதாகவும் உறுதி மொழி வழங்கியதை அடுத்து அப்பகுதியில் இருந்து சுமார் இரவு 08 மணியளவில் இளைஞர்கள் கலைந்து சென்றனர்.

மேற்படி விபத்தில் மரணமடைந்த இளைஞன் திருக்கோவில் 4 மண்டானை கிராமத்தினை சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான அருள்நாயகம் அருள்ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


புகைப்படங்கள் கீழே --