Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசிய கூட்ட்டமைப்பு ஆற்சியமைப்பு

திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசிய கூட்ட்டமைப்பு உறுப்பினர் இராசையா வில்ஷன் கமலராஜன் தெரிவு செய்யப்பட்டார்


திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக
தமிழ் தேசிய கூட்ட்டமைப்பு உறுப்பினர் இராசையா வில்ஷன் கமலராஜன் தெரிவு செய்யப்பட்டார்


கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆனையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இன்று (29) இடம்பெற்ற திருக்கோவில் பிரதேச சபையின் 16 உறுப்பினர்களை கொண்ட முதலாவது அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன், ஈழமக்கள் ஜனாயக கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன இணைந்து ஆட்சி அமைத்துள்ளது


தலைமை பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படடமையினால் 16 உறுப்பினர்களது சம்மதத்துடன் திறந்த வாக்கெடுப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டிருட்ந்தது


இவ் திறந்த வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான இராசையா வில்ஷன் கமலராஜன் 09 வாக்குகளும் விவேகானத்தராசா புவிதராஜன் 07 வாக்குகளும் பெற்று 02 வாக்குகள் வித்தியாசத்தில் இராசையா வில்ஷன் கமலராஜன் தெரிவு செய்யப்படடர்


உபதலைவர் தெரிவிற்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நினையில் திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான கோவித்தபிள்ளை காந்தரூபன் 06 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான சின்னதம்பி விக்னேஸ்வரன் 10 வாக்குகளையும் பெற்று 04 வாக்குகள் வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது