Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வார நிகழ்வு

(திருக்கோவில் நிருபர்-ASK) ஆரோக்கியமான முதியவர்களாக வாழ்வதன் ஊடாகவே நாட்டுக்கும் நமக்கும் ஆரோக்கியமாகியம். இந்த நாட்டில் 2041ம் ஆண்டு ம...



(திருக்கோவில் நிருபர்-ASK)

ஆரோக்கியமான முதியவர்களாக வாழ்வதன் ஊடாகவே நாட்டுக்கும் நமக்கும் ஆரோக்கியமாகியம். இந்த நாட்டில் 2041ம் ஆண்டு முதியோர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக அதிகரிக்கவுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன அவ்வாறு முதியோர்களாக நாமே இருக்கப்போகின்றோம் எனவே இன்றைய எமது உடல்நலம் ஆரோக்கியமானதாக இருந்தால்தான் நாட்டுக்கும் நமக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும் என திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்தள்ளார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை(20) இடம்பெற்ற விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வாரத்தினை முன்னிட்டு இடம்பெற்ற உடற்பயிற்சினை நிறைவு செய்து உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்படிக் கருத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நாட்டுக்கு முதியோர்கள் பெரும் வளமான சொத்தாகும். இவர்கள் ஆரோக்கியமில்லாத முதியோர்களாக இருப்பார்களே ஆனால் அது நாட்டுக்கு பெரும் சுமையான நிலைமைகளை கொடுக்ககூடியதாக அமைந்துவிடும். இதனால் இன்று இருப்பவர்கள் தங்களின் உடல் நலத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.இதனை ஊக்கப்படுத்தும் நோக்கில்தான் இந்த விளையாட்டு வாரம் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் ஒரு சிறிய நாடு இங்கு சுமார் 13இலட்சத்திற்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஒரு சிறிய நாட்டில் கூடிய அரச பணியாளர்களை கொண்ட நாடாக இலங்கை இருந்து வருகின்றது. இவ்வாறு பணிபுரிக்கின்ற உத்தியோகத்தர்களின் வினைத்திறன் தொடர்ந்தும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த அடிப்படையில் நோக்கின்ற போது இவ்வாறு வினைத்திறன் குறைவுக்கு ஒரு காரணமாக உடலாரோக்கியம் முக்கிய பங்கு வகிப்பதன் காரணத்தினால் இவ்வாறான உடலாரோக்கியம் தொடர்பான வழிப்புணர்வகளை அரச உத்தியோகத்தர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலைகள் தற்போது அரசாங்கத்திற்கு எற்பட்டுள்ளது. இதனை நோக்காகக் கொண்டுதான் இன்று விளையாட்டுடன் கூடிய உடநலம் மேம்பாட்டுக்கு தேவையான உடற்பயிற்சிகளை முன்னெடுத்துள்ளோம்.

ஒரு அரச உத்தியோகத்தர் ஆரோக்கியமானவராக இருக்கும் நிலையில்தான் அவரால் சுறுசுறுப்பாக மக்களின் பணிகளை சோர்வின்றி மேற்கொள்ள முடியும். எனவே மக்களின் பணிகள் சிறப்பாக அமைய வேண்டுமானால் அரச அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் ஆரோக்கியமானவர்களாக இருக்க வேண்டும். மக்கள் நலநன்களை கருத்தில் கொண்டு அரச பணியாளர்கள் இன்றுடன் மட்டும் உடநலத்தினை பேணாது தொடர்ந்தும் பேணவேண்டும். என அவர் மேலும் தெரிவித்தள்ளார்.