Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

இன்று சங்கமன்கிராமத்தில் வீடுகள் அற்ற 25குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

[] அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் சங்கமன்கிராமத்தில் வீடுகளற்ற 25 குடும்பங்களுக்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்ச...


[]

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் சங்கமன்கிராமத்தில் வீடுகளற்ற 25 குடும்பங்களுக்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் 50வது மாதிரிக் கிராமம் வீடமைப்பு தொகுதி இன்று  23ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு பயனாளிகளிடம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


வீடமைப்பு அதிகார சபையின் செமட்ட செவண வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் சங்கமன்கிராமத்தில் 25 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ் வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் பிரத அதிதியாக  வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்கள் வருகைதந்து வைபவ ரீதியாக ஒவ்வொரு வீடாகச் சென்று வீடுகளை திறந்து வைத்ததுடன் வீட்டின் உரிமையாளர்களுக்கான வீட்டின் அனுமதிப் பத்திரத்தினை அவரே கையளித்திருந்தார்.

இந்நிகழ்வில்  ஆரம்ப கைத்தொழில்  அமைச்சர் தயாகமகே, மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் அரச அதிகாரிகள் ,பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.