Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிசை வீடுகளும் நிரந்தர வீடுகளாக அமைத்துக் கொடுக்கப்படும்

(திருக்கோவில்  நிருபர்-ASK) 2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிசை வீடுகளும் நிரந்தர வீடுகளாக அமைத்துக் ...


(திருக்கோவில்  நிருபர்-ASK)

2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிசை வீடுகளும் நிரந்தர வீடுகளாக அமைத்துக் கொடுக்கப்படும்.

-அமைச்சர் சஜீத் பிரேமதாச சங்கமன்கிராம வீட்டத்திட்ட திறப்பு விழாவில் உறுதியளிப்பு-


இன்று நாட்டில் யுத்தம் முடிவடைந்த போதும் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கான யுத்தம் முடிவடையவில்லை. அதாவது பொருளாதாரம், குடிநீர், தொழில்வாய்ப்பு வீடு போன்ற அடிப்படை பிரச்சினைக்ளுக்கான யுத்தம் இன்றும் நிறுத்தப்படவில்லை. இதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான யுத்தத்தை முடிப்பதற்காக போராடி வருகின்றனர்.

அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்பட்டாலும் வீடில்லா பிரச்சினைக்கு 2025ஆம் ஆண்டுக்கு முன்பதாக அம்பாறை மாவட்டத்தில் குடிசையில் வாழுகின்ற மக்களுக்கு சொந்தமாக நிரந்தர வீடுகளை செமட்ட செவண வீட்டுத் திட்டத்தின் ஊடாக வீடுகளை நிர்மாணித்து கொடுப்பேன் என இந்த இடத்தில் உங்களுக்கு உறுதியளிக்கின்றேன் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச தெரிவித்தள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி சங்கமன்கிராம 50வது மாதிரி வீட்டுத் திட்டத்தினை கடந்த  23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்தள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில்;  மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கில் எமது அமைச்சின் வீடமைப்பு அதிகாரசபைக்காக அம்பாறையில் ஒரு அலுவலகமும், கல்முனையில் ஒரு அலுவலகமும், இதேபோல்; திருக்கோவில், ஆலையடிவேம்பு, காரைதீவு, நாவிதன்வெளி பிரதேச தமிழ் மக்கள் நன்மைபெறும் வகையில் எதிர்காலத்தில் ஒரு வீடமைப்பின் அதிகாரசபையின் அலுவலகமும் திறக்கப்பட்டு இன,மத பேதமின்றி அனைவருக்கும் சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாங்கள் இந்த நாட்டை பொறுப்பெடுக்கும் போது பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார சுமையுடன்தான் பொறுப்பெடுத்தோம் அன்றை ஆட்சியாளர்கள் நாட்டை அபிவிருத்தி செய்யாது மக்களை சிந்திக்காது அவர்களின் பைகளை நிறப்பியதோடு சகாக்களின் பைகளையும் நிரப்பியிருந்தனர். 65இலட்சம் குடும்பங்கள் வாழும் இந்த நாட்டிலே 25இலட்சம் குடும்பங்கள் வீடில்லாமல் வாழுகின்றனர். நாங்கள் இந்த நாட்டை கையேற்றதில் இருந்து மக்களின் மீது அக்கரைகொண்டு பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் வீடுகளை நிர்மாணித்து வருகின்றோம்.

எனது தந்தை முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச அவர்கள் இந்த நாட்டில் அனைவருக்கும் வீடுகளை வழங்கவதற்கு தீர்மாணித்து இருந்தார். ஆனால் துரதிஸ்டவசமாக அவர் 1993ஆம் அண்டு மரணமடைந்தார். அதனையடுத்து அவரது இந்த வீட்டத்திட்டம் நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் அவரின் கனவை நிறைவு செய்யும் வகையின் இன்று நான் அனைவருக்கும் எனது அமைச்சின் மூலமாக வீடுகளை வழங்க தீர்மாணித்து முன்னெடுத்து வருகின்றேன்.

2020ஆம் ஆண்டு 2500 வீட்டுத்திட்டகிராமங்களை  நிறைவு செய்ய தீர்மாணித்துளோம். அந்தவகையில் 2018ல் 650 வீட்டுத் திட்டத்தையும், 2019ஆம் ஆண்டில் 650 வீடுத் திட்டங்களையும், 2020ஆம் ஆண்டில் 650 வீட்டுத்திட்ட கிராமங்களையும் உறுவாக்கிய பின்னர்தான் ஜனாதிபதி தேர்தலின் போது இந்த வீட்டுத் திட்டங்களை மக்களிடம் கையளித்துவிட்டு உங்களின் பிரதிநிதியாக உங்களிடத்தில் வருவோமென அவர் மேலும் தெரிவித்திருந்தார்.