தம்பிலுவில் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - 2018

Share:
தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2018 யின் இறுதி நாள் நிகழ்வுகள் 2018.02.06 இன்று செய்வாய்  பிற்பகல் 2.30மணிக்கு கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர்  திரு.வ.ஜயந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகம்  அவர்களும் கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன்,  திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்கள் திரு.வை.ஜெயசந்திரன்,  திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஆர் இராஜேந்திரா, திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர்  பி.மோகனகாந்தன், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பு அதிகாரி திரு.ஏ.எஸ்.பி. பண்டார  ஆகியோரும், பிரதிக்கல்வி பணிப்பாளர்களான   திரு.வி.குணாளன், திருமதி .ரி.இராஜசேகர், செல்வி என். வரனியா, உதவிக்கல்விப் பணிப்பாளர்களான திரு.எம்.சபேஸ்குமார், திருமதி ஏ.சி.என்.நிலோபரா. மற்றும் திரு.எச். நைரூஸ்கான் , திரு பி. பரமதயாளன் கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக தி கோட்டக்கல்வி பணிப்பாளர்கள்   மற்றும்  திருக்கோவில் வலய உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்,  திருக்கோவில் வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள்,   திருக்கோவில் கோட்ட பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன் இதன் போது மேலும் பாடசாலை கல்வி சார் மற்றும் கல்விசாரா அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மாணவர்களின்  விளையாட்டுகள் மற்றும் அணிநடை, உடல்பயிற்சி கண்காட்சி  போன்றனஇடம்பெற்றது. மேலும்   460புள்ளியை பெற்றும் கம்பர்  இல்லம் 1ம் இடத்தினையும், 416 புள்ளியை பெற்று இளங்கோ இல்லம்  2ம் இடத்தினையும், 403புள்ளியை பெற்று  வள்ளுவர் இல்லம் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!