மரண அறிவித்தல் - அமரர். நாகலிங்கம் இராஜேஸ்வரி

Share:
மரண அறிவித்தல் -
அமரர். நாகலிங்கம் இராஜேஸ்வரி

தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  அமரர். நாகலிங்கம் இராஜேஸ்வரி
அவர்கள் 2017.11.01 திகதி இன்று காலமானார். 


 மலர்வு -1936.07.29                   உதிர்வு - 2017.11.01


அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், பொன்னம்மா  தம்பதிகளின் அன்பு மகளும்,  லேட்சுமப்பு நவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கிருபைரெத்தினம், சின்னராசா, கோபாலபிள்ளை   ஆகியோரின் அன்பு சகோதரியும், தவமணி, கோணேசமூர்த்தி, ஜெயராணி,  ஜீவராணி ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,  தயானந்தமூர்த்தி, ரன்சினிதேவி, விநாயகமூர்த்தி, தயாருபன், ஆகியோரின் அன்பு மாமியாரும்

நிலானி,சஜிதன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், பிறேமலதா, ரூபராஜன், டிதிராஜன், வேதுசன், கிரிசோதன், கஜாரணி, திருவரங்கன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல், அவரது இல்லத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று தம்பிலுவில் இந்து மயானத்தில் 2017.11.02ம் திகதி வியாழக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் .  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!