நாளை நாட்டின் 14 மாவட்டங்களில் அனர்த்த எச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு

Share:
[NR]

நாட்டின் கடற்கரையை அண்டிய 14 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 77  அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்களில் நாளையதினம் 05.11.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு பூராகவும் உள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அனர்த்த எச்சரிக்கை ஒலி, அனர்த்த பாதுகாப்பு தொடர்பான ஒத்திகைக்காக ஒழிப்பதற்கான சகல ஏற்பாடுகளினை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொண்டுள்ளது. இவ் ஒத்திகை நிகழ்வு தொடர்பாக பொது மக்கள் எவரும் பதட்டம்  கொள்ளத்தேவையில்லை என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ் ஒத்திகை நிகழ்வு அண்ணளவாக சுமார் 2.00மணியளவில்( 2.04 நிமிடமளவில்)  இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு எமது பிரதேசமாகிய தம்பட்டை, தம்பிலுவில் ,திருக்கோவில், விநாயகபுரம் மற்றும் தாண்டியடி ஆகிய திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலும் இவ் ஒத்திகை நிகழ்வு இடம்பெறவுள்ளது. மேலும்  இவ் ஒத்திகை நிகழ்வின் போது அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள 09 கோபுரங்களும், அம்பாறையில் அமைக்கப்பட்டுள்ள 08 கோபுரங்களும், மற்றும் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள 07 கோபுரங்கள் உள்ளடங்கலாக 14 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 77 கோபுரங்களிலும் ஒரே நேரத்தில் இயங்கச்செய்து  அனர்த்த எச்சரிக்கையினை ஒலி எழுப்பப்படும்.

மேலும் இதுவரை காலமும் இடம்பெற்ற  இவ் அனர்த்த எச்சரிக்கை ஒலி ஒத்திகை ஆனது மாவட்டத்தினை அல்லது குறித்த பிரதேசத்தினை மையப்படுத்தி இடம்பெற்றது, அனால் நாளை  05.11.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் இவ் ஒத்திகை நிகழ்வானது நாட்டின் 14 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை கோபுரங்களிலும் ஒரே தடவையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!