திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நடுகை விழா

Share:
[NR & திருக்கோவில் நிருபர்: ஏ.எஸ்.கே ]

திருக்கோவில் கல்வி வலயத்தின் திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின்  60 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளமை புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நடுகை விழா நிகழ்வானது 2017.09.04 திகதி புதன்கிழமை இன்றையதினம் வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.பி.நாதன் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வு விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில்   திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லினை சம்பிரதாயபூர்வமாக நட்ட வைத்ததுடன் திருக்கோவில் வலயக்கல்வி நிர்வாகப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.குணாளன், கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.இரவீந்திரன் மற்றும் பாடசாலை அதிபர்கள்,  ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டு வைத்தர்.

இக் கட்டிடத்தொகுதி மீள்குடியேற்ற அமைச்சின் 60 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது. மேலும்  இவ் பாடசாலையானது திருக்கோவில் கல்வி வலயத்தில் 43வது பாடசாலையாக கடந்த 2017 ஜனவரி மாதம் ஆரம்பித்த வைக்கப்பட்டதுடன் இவ் பாடசாலை தற்காலிக கட்டம் ஒன்றில் 49 மாணவர்களுடன் இரண்டு ஆசிரியர்களைக் கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக பாதிகக்கப்பட்ட இவ் கிராமத்தில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வளப்பற்றாகுறைகளுடன் அதிபரின் முயற்சினாலும் பொது மக்களின் பங்களிப்புடனும் இப்பாடசாலையில் மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்க்பட்டு வந்த நிலையில் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் ஆகியோரின் முயற்சினால் மீள் குடியேற்ற அமைச்சின் 50 இலட்சம் பெருமதியான நீதி ஒதுக்கீட்டின் ஊடாக இவ் புதிய  வகுப்பறைகளை கொண்ட புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதேவேளை இவ் புதிய பாடசாலையின் கட்டட நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் இவ் பாடசாலைக்கு தேவையான தலபாடங்களை கொள்வனவு செய்யும் வகையில் 10 இலட்சம் ரூபாய் நிதியும் மீள் குடியேற்ற அமைச்சியிடம் கோரப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு தற்போது வேலைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!