யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்

Share:
[திருக்கோவில் நிருபர்: ஏ.எஸ்.கே ]

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுகுட்பட்ட காஞ்சிரம்குடா பாவட்ட குளத்தடியில் கால்நடைகளை மேய்ந்துக் கொண்டு இருந்த வேளை யானை தாக்கி  ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மரணமடைந்தவர் பாடசாலை வீதி விநாயகபுரம் 2 உள்ள தனது வீட்டில் இருந்து 04.10.2017 நேற்று புதன்கிழமை காலை வேலைக்காச் சென்ற வேளை குளத்தடியில் வைத்து யானை தாக்கியுள்ளது.

இதனையடுத்து இவர் சம்பவ இடத்திலேயே மரணடைந்துள்ளதுடன் விநாயகபுரம் 2 பாடசாலை வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணபிள்ளை சதாசிவம் வயது 52 என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்

இவ் மரணம் தொடர்பான மேலதிக விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!