எமது பிரதேசத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவாகியவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

Share:

[NR]

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு(SLEAS) எமது பிரதேசத்தில் இருந்து தெரிவாகிய ஆசான்களை பாராட்டிக் கௌரவிக்கின்ற நிகழ்வானது 2017.10.15  திகதி ஞாயிற்றுக்கிழமை நேற்றையதினம் மாலை 2.30 மணியளவில் திகோ/தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசியபாடசாலை)யில் 2010 தொடக்கம் 2016 ஆண்டு க.பொ.த சாதார தர மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

திருக்கோவில் பிரதேசத்தில் எமது தம்பிலுவிலை சேர்ந்த இருவர் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு(SLEAS) தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதில் அகில இலங்கைரீதியில் 6ம் இடத்திலும் தமிழ் மொழி ரீதியில் 1ம் இடத்திற்கும் (பொது) தெரிவாகிய திரு.மு. சபேஸ்குமார் மற்றும் விசேட பிரிவின் கீழ்  தெரிவாகிய திரு.கி. கங்காதரன் ஆகியோரை மாணவர்கள் பாராட்டிக் கௌரவித்தனர். மேலும் இந்நிகழ்வானது  எமது பிரதேசத்தில் முதல் முறையாக 2010 தொடக்கம் 2016 ஆண்டு க.பொ.த சாதார தர மாணவர்கள் ஒன்றிணைந்து தங்களின் ஆசிரியர்களை பாராட்டுதலும் கௌரவிப்பும் செய்தமை  குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எமது பிரதேசத்தில் இருந்து இலங்கை நிர்வாக சேவை (SLAS) தெரிவாகியாவரும்  தற்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருமான  திரு தி.ஜே. அதிசயராஜ் அவர்களும் மற்றும் கௌரவ அதிதியாக திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.வா.குணாளன் அவர்களும் மற்றும் சிறப்பு அதிதியாக பொத்துவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.சோ.இரவீந்திரன், திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செ.தர்மபாலன், மற்றும் திகோ/தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசியபாடசாலை)யின் அதிபர் திரு.வ. ஜயந்தன் ஆகியோரும் மற்றும் அதிதிகளாக திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.பி.நாதன்,  தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இந்நிகழ்வினை வெகுசிறப்பாக நடாத்த உதவியினையும், பங்களிப்பினையும்   புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் ஒலி அமைப்பினை உதவி செய்த தம்பிலுவில் RN CD Home மற்றும் அனைத்து வகையிலும் உதவி நல்கிய அனைவருக்கும் விழாக்குழுவின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!