விநாயகபுரம் அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குடபவனியும், அடியவர்களுக்கு வஷ்திரம் வழங்கும் நிகழ்வும்

Share:

[NR]

(56-புகைப்படங்கள்[Photos])
கிழக்கிலங்கை திருக்கோவில் விநாயகபுரம்  அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன்  ஆலய வருடாந்த மகோற்சவமும், தீமிதிப்பும்- 2017 நிகழ்வானது கடந்த  03.09.2017 திகதி ஞாயிற்றுக்கிழமை  திருக்கதவு திறத்தலுடன்  ஆரம்பமாகியது.


அன்னையின் மகோற்சவ திருச்சடங்கு நிகழ்வில் அன்னைக்கு பாலாபிஷேகம் சாற்றும் பாற்குடபவனி நிகழ்வானது நேற்றுமுன்தினம் 05.09.2017 திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில்  விநாயகபுரம் ஶ்ரீ  சிவன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி  விநாயகபுரம் அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தினை அடைந்து பக்த அடியார்களின்  அரோகரா  கோசத்துடன்  அன்னை பத்திரகாளி அம்மனிற்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது.  இதில் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் (250) மேற்பட்ட அடியார்கள் இவ் பாற்குடபவனி நிகழ்வில் கலந்து கொண்டனர்.


மேலும் அன்றையதினம் விசேட சமய சொற்பொழிவு நிகழ்வும் இடம்பெற்றது இதில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராஜரெத்தினம், இலங்கை சத்திய சாயி நிலையத்தின் திருக்கோவில் பிரதேச பிரத்திநிதி திரு லோகிதகுமார் அவர்களும், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக துறை பீடாதிபதி கலாநிதி எஸ்.குணபாலன் அவர்களும் சொற்பொழிவு ஆற்றினர். தொடர்ந்து சடங்கு பூஜைகள் இடம்பெற்று அன்னையின் பாலாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்ட அடியவர்களுக்கு வஷ்திரங்களும் வழங்கப்பட்டது.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!