முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு தேசிய வார நிகழ்வு

Share:

முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு தேசிய வார்த்தை முன்னிட்டு திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  முன்பள்ளி சிறார்களுக்கான கலை நிகழ்ச்சிகள் கடந்த  31.08.2017 திகதி வியாழக்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. K.ஜினித்தா அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில்  திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.S.ஜெகராஜன் அவர்கள், உதவி பிரதேச செயலாளர் திரு.S.ஜெயரூபன் அவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்,  பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்,  சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், முன்பள்ளி ஆசிரியைகள், சிறார்களின் பெற்றோர் முதலானோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர். இதன்  போது முன்பள்ளி  மாணவர்களின் கலைநிகழ்வுகள்  இடம்பெற்ற அவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.
No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!