சுவாட் திருக்கோவில் பிரதேச நிர்வாகிகள் கலந்துரையாடல்

Share:
[NR]

சுவாட் அமைப்பின் கீழ் செயற்படும் 14 கிளைக் கிராம நிர்வாகிகள் கலந்துரையாடல் கடந்த 2017.09.21 திகதி அன்று திருக்கோவில் பிரதேச நிருவாக உத்தியோகத்தர் திருமதி நிசாந்தி ஜீவகுமார் அவர்களுடைய தலைமையில்  சுவாட் அமைப்பின் திருக்கோவில் பிரதேச காரியாலம் தம்பிலுவிலில்  நடை பெற்றது.


 இந்நிகழ்வில் பிரமுகராக அதிபர் திரு. S.P.நாதன்  அவர்களும்  தலைமை அலுவலக பணியாளர் திருமதி மு.கிருஸ்ணவாணி அவர்கள் கலந்து கொண்டனர் . மேலும் இக்கலந்துரையாடலில் மாணவர் ஒழுக்கநெறி, வீட்டுச் சுழலில் பெற்றோர் நடந்து கொள்ளும் முறைமை போன்ற விடயங்கள் பற்றி  பிரமுகரான அதிபர் திரு. S.P.நாதன் அவர்களால் கருத்துக்கள் அங்கத்தவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!