விநாயகபுரம் அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமும், தீமிதிப்பும்- 2017

Share:

கிழக்கிலங்கை திருக்கோவில் விநாயகபுரம்  அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன்  ஆலய வருடாந்த மகோற்சவமும், தீமிதிப்பும்- 2017 நிகழ்வானது  02.09.2017 திகதி சனிக்கிழமை இரவு சங்காபிஷேக கிரியைகளுடன்  ஆரம்பமாகி 03.09.2017 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 மணியளவில் கடல் நீர் தீர்த்தம் எடுத்தலும், திருக்கதவு திறத்தலும் இடம்பெற்று  தொடர்ந்து பகல் 12.00 மணிக்கு சங்காபிஷேகம் நடைபெற்று பூஜை வழிபாடுகள் இடம்பெற்று 1ம் நாள் திருச்சடங்கு  பூஜை இடம்பெறும்.


05.09.2017 திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் பாற்குடபவனி நிகழ்வானது  விநாயகபுரம் ஶ்ரீ  சிவன் ஆலயத்தில் இருந்து விநாயகபுரம்  அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன்  ஆலயத்தினை அடைந்து அபிஷேகம் இடம்பெறும். மேலும் அன்றையதினம்  3ம் நாள் திருச்சடங்கு பூஜையும் இரவு அம்பாளின் முத்து சப்ர ஊர்வலமும் இடம்பெறும்.


மேலும் 07.09.2017 திகதி வியாழக்கிழமை நோற்ப்பு கட்டுதல் மற்றும் இரவு 7.30 மணிக்கு விநாயகபுரம் ஶ்ரீ  சிவன் ஆலயத்தில் இருந்து தீக்கட்டைகள் கொண்டுவரப்பட்டு  தீ மூட்டப்படும், இரவு சக்தி வாங்கலுடன்  5ம் நாள் திருச்சடங்கு பூஜையும் இடம்பெறும். தொடர்ந்து மறுநாள்  08.09.2017 திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு மஞ்சள் குளித்தலுடன் தீ மிதிப்பும் விசேட பூஜை வழிபாடும் இடம்பெறும் 


தொடர்ந்து  15.09.2017 திகதி வெள்ளிக்கிழமை எட்டாம்(08) நாள் சடங்கு பூஜையும் இரவு பொங்கல் வழிபாடும்,  தீக்குழிக்கு பால் வார்த்தலுடன் இவ்வருட நிகழ்வு யாவும் நிறைவுபெறும். பகல் பூஜை 12.00 மணிக்கும் இரவு பூஜை 7.00 மணிக்கும் இடம்பெறும்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!