கூகிளில் தமிழில் பேசி தமிழில் தட்டச்சிடும் வசதி அறிமுகம் ! Google Voice Typing | செயற்படுத்தும் முறை

Share:

கூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே .


கூகுலின் பேச்சு அங்கீகார மொழிகளுள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் இணைக்கப்பட்டுள்ளதாக கூகுல் அறிவித்துள்ளது. தட்டச்சு செய்வதைவிட குரல்வழி கட்டளை ஊடாக 3 மடங்கு விரைவாக குறுஞ்செய்திகளை அச்சிட முடியும்.

விரைவில் இவ்வசதி கூகுள் ட்ரான்ஸ்லேட் மற்றும் பிற தயாரிப்புகளில் கொண்டுவரப்படும் எனவும் கூகிள் தெரிவித்துள்ளது
தமிழ், சிங்களம் உள்ளிட்ட 21 மொழிகளை கூகுல் புதிதாக இந்த பட்டியலில் இணைத்துள்ளது.

இது தொடக்கம் என்பதால் குரல் வழி தேடல்/தட்டச்சில் பிழைகள் வரலாம். ஆனா போகப்போக இவ்வசதி மேம்படுத்தப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

உங்கள் போனில் செய்ய வேண்டியவை .

உங்களது தொலைபேசியில் Setting க்கு சென்று Language & ; Input தெரிவு செய்து Google voice typing பின் languages இல் இலங்கை தமிழை தெரிவு செய்யவும் .


அதன் பின் நீங்கள் உங்களது keyboard இல் mic touch செய்வதன் மூலம் தமிழில் பேசும்போது ரைப் பண்ணுப்படும் .ஏதும் சந்தேகம் இருப்பின் கமெண்ட் இல் தெரிவிக்கவும்

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!