திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை

Share:

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இணைந்து நடாத்தும் "ஸ்ரமிக்க சுரெக்கும" நடமாடும் சேவை கடந்த 21.08.2017ம் திகதி திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இவ் நடமாடும் சேவையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அமைச்சர் கெளரவ தலதா  அத்துகோரல அவர்கள் மற்றும் பிரதி அமைச்சர் கெளரவ மனுஷ நாணயக்கார மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகரான், மற்றும் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும்  ஏராளமான மக்கள் இவ் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயனை பெற்றுக்கொண்டனர்.No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!