அறிவித்தல் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை

Share:
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இணைந்து நடாத்தும். "ஸ்ரமிக்க சுரெக்கும" நடமாடும் சேவை.

இவ் நடமாடும் சேவையானது   திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து வெளிநாடு சென்று தொழில் புரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளை இலகுபடுத்தும் பொருட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அமைச்சர் கெளரவ தலதா  அத்துகோரல அவர்கள் மற்றும் 
 பிரதி அமைச்சர் கெளரவ மனுஷ நாணயக்கார அவர்களின் பங்குபற்றலுடன்  எதிர்வரும் 21.08.2017ம் திகதி திங்கட்கிழமை  காலை 09.00 மணிக்கு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன் போது நல்லிணக்கப் பிரிவு, நலன்புரிப் பிரிவு, விசேட புலனாய்வுப் பிரிவு, சமூகவியல் பிரிவு மற்றும் மாவட்ட அபிவிருத்தி அதிகாரிகளையும் சந்தர்ப்பம் உண்டு.  மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் சேவைகளை இங்கு  பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.


No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!