தேசிய இளைஞர் படையணி பயிற்சிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது


தேசிய இளைஞர் படையணி பயிற்சிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.










ஆறு மாத கால ஆரம்பப் பயிற்சியில் உங்களுக்கு...
  • ஆளுமை அபிவிருத்தி
  • தொழில் வழிகாட்டல்
  • தலைமைத்துவப் பயிற்சி
  • தகவல் தொழில்நுட்பம்
  • ஆங்கில்
  • தமிழ்
  • நுண்கலைக்கல்வி
  • தேகாப்பியாசம்
  • வெளிக்கள செயற்பாடுகள்

ஆரம்பப் பயிற்சியின் பின் பல்வேறு துறைகளில் அரச அங்கீகாரம் பெற்ற தொழிற் பயிற்சி

  • ஆரம்ப பயிற்சி நெறியில் பயிற்சியினைப் பெறுகின்ற இளைஞன் அல்லது யுவதியினால் காட்டப்படுகின்ற தொழிற் தேர்ச்சி மற்றும் தொழில் விருப்பின் பேரில் பாடநெறியின் நிறைவில் அரச அங்கீகாரம் பெற்ற தொழிற் பயிற்சியொன்றில் ஈடுபடுத்தப்படுவர்.
  • அந்த பயிற்சியின் போது கொடுப்பனவாக ரூபா பத்தாயிரம் தேசிய இளைஞர் படையணியினால் வழங்கப்படும்.
  • தொழிற் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டதன் பின்னர் பயிற்சியினைப் பெறுகின்ற ஒவ்வொரு இளைஞன் யுவதி தொடர்பிலும் பின்தேடலும், கண்காணிப்பும் தேசிய இளைஞர் படையணியினால் மேற்கொள்ளப்படும். 


தேசிய தொழிற் தகைமை (NVQ)
  • தேசிய இளைஞர் படையணியின் ஆரம்பப் பாடநெறியில் பயிற்சியினைப் பெறுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு NVQ முதலாம் மட்ட தகைமை வழங்கப்படும்.
  • இதன் மூலம் தேசிய இளைஞர் படையணி பயிற்சி நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்கின்ற எந்தவொரு நபருக்கும் NVQ ஏழாம் மட்டத்திற்கு அதாவது பட்டத் தகைமைக்கு பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
  • தேசிய இளைஞர் படையணியின் தம்புள்ள ஹோட்டல் பயிற்சி பாடநெறியினை பயிலுகின்ற மாணவ, மாணவியருக்கு NVQ மூன்றாம், நான்காம் மட்ட தகைமை வழங்கப்படும். 
விண்ணப்பபடிவம் ௨ரிய பிரிவு கிராம ௨த்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ளலாம், அல்லது இங்கே கீழே பதிவிறக்கம் செய்யலாம் அல்லது  Online ஊடாக விண்ணப்பிக்கலாம்.

 கீழ்காணும் வழிமுறை ஏதேனுமொன்றில் உங்களது விண்ணப்பத்தை எமக்கு அனுப்பி வைக்கவும்.
பதிவுத் தபாலின் மூலம் 
online மூலம்  


தொடர்புகளுக்கு:
0752520505 (P.Sailathan, English instructor), 
0752864458 (T.Rishikesan, IT INSTRUCTOR)










         
Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!