அரச திணைக்கள தலைவர்கள் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு சமுகமளிக்காது இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டுக்கும் செய்யும் துரோகம்

Share:
[திருக்கோவில் நிருபர்: ஏ.எஸ்.கே ]

அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு அரச திணைக்களங்கள தலைவர்கள் சமூகமளிக்காது இருப்பது அபிவிருத்தியை எதிர்ப் பார்த்து இருக்கும் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் அபிவிருத்தியினை இல்லாமற் செய்யும் அதேவேளை நாட்டுக்கும் துரோகச் செயலாகவே அமையும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நேற்று 14.08.2017 ஆம் திகதி கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொது மக்களின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுகின்ற போது அது தொடர்பாக முறையான திட்டங்களை அவிவிருத்தி கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்புடையவர்களாக இருப்பதுடன் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.

இவ்வாறு கூட்டத்திற்கு சமூகமளிக்காது இருப்பதனால் அந்த திணைக்களம் சார்ந்த அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடி முறையான அபிவிருத்திகளை எம்மால் முன்னெடுக்க முடியாது நிலைமைகள் ஏற்படுகின்றன. எனவே இவ்வாறு அபிவிருத்திக் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு சமூகமளிக்காத திணைக்கள தலைவர்களின் விபரங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் அகியோருக்கு எழுத்து மூலமாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!