திறந்தது திருக்கதவு!

Share:
தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் இவ்வாண்டுக்கான திருக்குளிர்த்திப்பெருவிழாவானது, இன்று (2017.06.06) செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற அம்மையின் ஆலயத்திருக்கதவு திறத்தலுடன் இனிதே ஆரம்பமானது. மரபுப்படி வண்ணக்கர் கருவறைத் திறப்புகளுடன் ஆலயத்துக்கு வீதிவலமாக அழைத்துவரப்பட்டு கப்புகனாரிடம் திறப்புகளை ஒப்படைத்தார். உரிய பத்ததி முறைப் பூசைகளை அடுத்து, பெண்கள் குரவையிட, ஆண்கள் 'அம்மம்மா கூய்' என்று வாழி பாட, கப்புகனார் அம்மையின் திருக்கதவம் திறந்தார். தொடர்ந்து வரும் ஏழு நாட்களும் மதியமும் மாலையும் திருக்குளிர்த்திச் சடங்கு இடம்பெற இருக்கின்றது.  நாளை புதன்கிழமை முதல் மாலையில் வழக்குரை பாடுவதும், அன்னையின் திருவுலாவும் இடம்பெறும்.


No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!