மோட்டார் சைக்கிளைத் திருடியவர் கைது

Share:
[ஏ.எஸ்.கே ]

மோட்டார் சைக்கிளொன்று திருட்டுப் போன சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை, தம்பிலுவில் பிரதேசத்தில் இன்று பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


அத்துடன், சந்தேக நபரிடமிருந்து குறித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயிருந்தது என பொலிஸில் அதன் உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையில் விசாரணை செய்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் கூறினார்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!