Thursday, June 22, 2017

டெங்கு நோய்யை கட்டுப்படுத்தும் வகையிலான சுற்றாடல் தூய்மைப்படுத்தல் விழிப்புணர்வு நிகழ்வு

[திருக்கோவில் நிருபர்: ஏ.எஸ்.கே ]

சுற்றாடலை துய்மைப் படுத்தவதன் ஊடாக நாட்டில் தற்போது தீவிரமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அம்பாறை திருக்கோவில் உமிரி எனும் சுற்றுலாப் பிரதேசத்தில் இன்று 22.06.2017 வியாழக்கிமை இலங்கை முப்படைகள் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகம், கடலோர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை என்பன ஒன்றினைந்து பொது மக்களை விழிப்புணர்வு செய்யும் வகையிலான சுற்றாடலை  தூய்மைப்படுத்தும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது.


இவ் வழிப்புணர்வு நிகழ்வில் உமிரி கடலோர சுற்றுலாப் பிரதேசத்தில் சுமார் 15 கிலோ மீற்றர் துரம் சுத்தம் செய்யப்பட்டதுடன் பெருமளவிலான பிளாஷ்டிக் பொருட்களும் அங்கிருந்து அகற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் கருத்து தெரிவிக்கையில் இன்று ஒரு முன்மாதிரியாக டெங்கொழிப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு தொடர்ந்து சுற்றாடல் அசுத்தமாகும் வகையில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந் நிகழ்வில் யூன்டிபிஇ சுவாட்இ ஈயூ மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அனுசரனையுடன் இடம்பெற்றதுடன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன்இதிருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே.பண்டாரஇ கடலோர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் இணைப்பாளர் கே.சிவகுமார் முப்படைகள்இதிருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர் மற்றும் தாண்டியடி பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் ஆகியோரம் இந்த விழிப்பணர்வு சுற்றாடல் துய்மைப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தனர்.













No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!