அறநெறி கல்வியின் முக்கியத்தவத்தினை மக்களுக்கு தெளிவூட்டும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி

Share:

[திருக்கோவில் நிருபர் ஏ.எஸ்.கே ]

தேசிய இந்துசமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு இந்து சமய அறநெறிக் கல்வி கோடி தினம் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் இந்து ஆலயங்களினால் ஏற்பாடு  செய்யப்பட்டது.


இதன் போது அறநெறி கல்வியின் முக்கியத்தவத்தினை பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறும் வகையிலும்,ஞாயிறு தினத்தில் தனியார் கல்வி நிலையங்களை நடத்தாது மாணவர்களை சமய விழுமியங்களை கற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தினை வழங்குமாறு கோரிக்கை விடுத்து 16.06.2017 வெள்ளிக்கிழமை மாலை விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம் பெற்றது.

இவ் பேரணி பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதியூடாக திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம் வரை சென்று அங்கு பஜனை, திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய கோளறு பதிகம் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்தினரால் வெளியீட்டு வைக்கப்பட்துடன் சமய சொற்பொழிவுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!