விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு உற்சவப் பெருவிழா - 2017

Share:
விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு உற்சவப் பெருவிழா - 2017

2017.06.21 திகதி புதன்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு திருக்கதவு திறத்தலும் அபிஷேகப் பூஜையும், பகல் , இரவு பூஜைகளுடன் அம்பாள் இரவு உள் வீதிவலம் இடம்பெறும்.

தொடர்ந்து அடுத்தடுத்து நாட்கள் அம்பாளின் இரண்டாம் (2ம்), மூன்றாம்(3ம்) வீதி உலா இடம்பெற்று.

 2017.06.24 திகதி சனிக்கிழமை இரவு பூஜைகள் இடம்பெற்று முதலாம் வீதி உலா இடம்பெற்று அம்பாள் சித்திரத்தேரில் கிராம ஊர்வலம் நடைபெறும்.

தொடர்ந்து 2017.06.25 திகதி ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் நிறைவு பூஜையும், பொங்கல் நெல் குற்றுதல் நிகழ்வும், இரவு அடியார்களின் பொங்கல் நிகழ்வில் இடம்பெறும்.

தொடர்ந்து 2017.06.26  திகதி திங்கட்கிழமை அதிகாலை 3.00மணியளவில் பூஜைகள் நடைபெற்று அம்பாள் திருக்குளிர்த்தி ஆடலும், திருக்குளிர்த்தி பாடப்பட்டு, தீர்த்தமாடுதலும் நடைபெற்று  அம்பாளின் திருக்கதவு மூடப்படும்.

மேலும் 08ம் நாள் சடங்கும் வைரவர் பூஜையும் 02.07.3017 திகதி ஞாயிறு ஆரம்பமாகி 03.07.2017 திகதி திங்கட்கிழமை அதிகாலை நிறைவடையும்.


No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!