கிராம மக்களை காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வனப்பகுதியை அண்மித்த மீள்குடியேற்ற கிராம மக்களை காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று 2017.05.30 நேற்று செவ்வாக்கிழமை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மரண பயத்துடனேயே தாம் நாள் தோறும் வாழ்க்கையை கொண்டு செல்வதாக கவலை வெளியிட்ட பிரதேச மக்கள், அரசியல் வாதிகள் மக்களின் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லையெனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அம்பாறையின் தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, சாகாம், தாண்டியடி மற்றும் ஸ்ரீவள்ளிபுரம் ஆகிய ஜந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டனர்.

மீள்குடியேற்றப்பட்ட காலப்பகுதியிலிருந்து காட்டு யானைகளின் தாக்கம் காரணமாக இதுவரை 13 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு கிராமத்தில் யானை தாக்கியதில் 55 வயதான முத்துப்பிள்ளை மகேஸ்வரி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, சாகாம், தாண்டியடி மற்றும் ஸ்ரீவள்ளிபுரம் ஆகிய ஜந்து கிராமங்களைச் சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் இன்று யானை தாக்கி மரணமடைந்த பெண்ணின் கண்ணீர் அஞ்சலிப் பதாகையை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யானை தாக்கி மரணமடைந்த பெண்ணின் வீட்டில் இருந்து பேரணியாக சென்று திருக்கோவில் பிரதேச செயலக அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் தங்கள் உயிர்களை காப்பாற்றித் தாருமாறு கோரி மக்கள் திருக்கோவில் பிரதேச அலுவலகத்தின் வாயிலை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்நிலையில் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே.பண்டார சம்பவ இடத்திற்கு வருகைதந்து மக்களுடன் கலந்துரையாடிய போது மக்கள் தமது ஆர்ப்பாட்டத்தினை கைவிடாது முன்னெடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி.வணிகசிங்க எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் யானை வேலியை அமைத்து தருவதாக உறுதிமொழி வழங்கியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.







Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!