மனித விழுமியங்களுக்கான சர்வமத நடைபவனி

Share:
மனித விழுமியங்களுக்கான சர்வமத நடைபவனி
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சர்வமதத்தினையும் ஒன்றிணைத்து  மனித விழுமியங்களுக்கான சர்வமத நடைபவனி நிகழ்வு ஒன்று இன்று ஞாயிறு 07.05.2017  காலை 7.00 மணி தொடக்கம் காலை 9.30 மணி வரை நடைபெற்றது. உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மனிதனின் மேம்பாட்டிற்கு ஐம்பெரும் மனித விழுமியங்களான சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை மற்றும் அகிம்சை ஆகியவற்றினை கடைப்பிடிப்பதன்  மூலம் இனங்களிடையே  அன்பு, ஒற்றுமை மற்றம் சகிப்புத்தன்மை போன்றவற்றினை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.  இவ்  நடைபவனி நிகழ்வை  இலங்கை ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தின் இணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

 மேலும் இவ் நடைபவனி நிகழ்வானது அக்கரைப்பற்று  ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் இருந்து ஆரம்பித்து அம்பாறை வீதியின் ஊடாக அக்கரைப்பற்று நகரின் வழியாக சாகாமம் பிரதான வீதி வழியாக மீண்டும் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியை அடைந்து நிறைவடைந்தது.

மேலும் இந்நிகழ்வு சர்வமத பிராத்தனையும் ஆரம்பமாகியது. திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன், மற்றும் மதகுருமார்கள்,  இலங்கை ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தின் தலைவர், ஆன்மீக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பலரும்  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  இதன் போது  சர்வமத தலைவர்களினால் மனித விழுமியங்கள் தொடர்பாக விழிப்புணர்வு சொற்பொழிவுகள்  இடம்பெற்றது 

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!