விரைவில் பல்கலைக்கழக மாணவர் வெட்டுப்புள்ளிகளை வெளியிட நடவடிக்கை

Share:
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளி விரைவில் வெளியிடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.2016-2017 பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை தற்போது துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாணவர்களின் பட்டியல் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 2016 கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை மீள்பரிசீலனை பெறுபேறுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன. இந்த பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கு எவரும் இதுவரையில் விண்ணப்பிக்கவில்லை என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்கப்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஆணைக்குழு தயாராக உள்ளது. 2016-2017 பல்கலைக்கழக கல்வி ஆண்டை. ஒக்டோபர் மாதம் 1ம் திகதி ஆரம்பிக்க கல்வி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இவ்வருடத்தில் இருந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!