நேரம் சார்ந்த மின்சார கட்டண முறைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

Share:
வீட்டு மின் பாவனையாளர்களுக்காக முன்வைக்கப்பட்ட நேரம் சார்ந்த கட்டண முறைக்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

பணிமிகுதியான நேரங்களில் மின்சார பயன்பாட்டை குறைத்துக் கொள்வது இதன் பிரதான நோக்கமாகும்.

அதனடிப்படையில் , இரவு 10.30 மணி தொடக்கம் காலை 5.30 மணி வரையிலான சிக்கன காலத்தில் அலகொன்றிற்காக 13 ரூபாய் அறவிடப்படவுள்ளது.அதேபோல் , காலை 5.30 மணி முதல் பிற்பகல் 6.30 மணிவரையிலான காலப்பகுதியில் அலகொன்றிற்காக 25 ரூபா அறிவிடப்படவுள்ளது.

பிற்பகல் 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலான பணிமிகுதியான நேரத்தில் மின் அலகொன்றிற்காக 54 ரூபாய் அறவிடப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!