இலங்­கையில் இரண்டு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான ஆஸ்­துமா நோயா­ளிகள்

Share:
இலங்கை சனத்­தொ­கையில் 2 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் ஆஸ்­துமா நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். பொது­மக்கள் மற்றும் ஆஸ்­துமா நோயா­ளிகள் கூட இந் நோய் உயிர் அபா­ய­மிக்க நோய் என்­ப­தனை அறிந்­தி­ருப்­ப­தில்லை. எனவே இது குறித்து மக்­களை விழிப்­பூட்ட வேண்­டி­யது அவ­சியம் என கராப்­பிட்­டிய வைத்­திய சாலையின் வைத்­திய அத்தியட்சகர் முகுந்தன் தெரி­வித்தார் சர்­வ­தேச ஆஸ்­துமா தினம் நேற்று முன்தினம் 01.05.2017 அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இதற்­க­மைய மக்­களை விழிப்­பூட்டும் நோக்கில் அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.


அவர் மேலும் தெரி­விக்­கையில் ஆஸ்­துமா என்­பது பெரும்­பா­லா­ன­வர்­களில் காணப்­படும் சுவாச நோயாகும். இந்நோய் சுவா­சிப்­பதில் சிரமம்,மார்பு இறுக்கம், போன்ற அறி­கு­றி­க­ளுடன் ஆரம்­பித்து தீவி­ர­ம­டையும் போது வழக்­கத்­திற்கு மாறான இருமல் ஏற்­படும்.


ஆஸ்­துமா முக்­கி­ய­மாக அதன் மருத்­துவ அறி­கு­றி­களால் கண்­ட­றி­யப்­பட்டு நீண்­ட­கால மருந்துப் பாவ­னையின் மூல­மாக கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இது குழந்தை பரு­வத்­தி­லி­ருந்து வய­து­வந்தோர் வரை அனை­வ­ரையும் பாதிக்கும். சாதா­ரண, கடு­மை­யாக மற்றும் உயி­ருக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்தும் நிலை வரை இந்நோய் தாக்­கம் காணப்­ப­டு­கின்­றது.
கடந்த ஆண்­டு­களில் சுற்­றுச்­சூழல் மாசு பாடு கார­ண­மாக இந் நோய் அதி­க­ரித்து வந்­துள்­ளது. உல­க­ளா­விய ரீதியில் 334 மில்­லியன் மக்கள் ஆஸ்­து­மா­வினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இது உலக சனத்­தொ­கையில் 14 சத­வீதம் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

ஏனைய நோய்­களை போன்று ஆஸ்­து­மாவை வரும்முன் தடுப்­பது சிகிச்­சையை விடவும் சிறந்­த­தாகும். ஆஸ்­து­மாவை தடுக்கும் மிக முக்­கி­ய­மா­னதும் பய­னுள்­ள­து­மான வழி ஒவ்­வா­மையை ஏற்­ப­டுத்தும் கார­ணி­களை தவிர்ப்­ப­தாகும்.
ஒவ்­வாமை மனி­த­னுக்கு மனிதன் வேறுப்­பட்­ட­தாகும். இதனை இனங்­கண்டு தவிர்ப்பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். ஆஸ்துமாவின் அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக வைத்தியரை நாடவேண்டியது அவசியமாகும்.

ஆஸ்துமா குறித்து மக்கள் பூரணமாக அறிந்திருக்க வேண்டும். இதனை இழிவான மக்களை விழிப்பூட்ட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!