நாளை, மனித விழுமியங்களுக்கான சர்வமத நடைபவனி நிகழ்வு

Share:
மனிதமனித விழுமியங்களுக்கான சர்வமத நடைபவனி
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சர்வமதத்தினையும் ஒன்றிணைத்து  மனித விழுமியங்களுக்கான சர்வமத நடைபவனி நிகழ்வு ஒன்று நாளை ஞாயிறு 07.05.2017  காலை 7.00 மணி தொடக்கம் காலை 9.00 மணி வரை இடம்பெறவுள்ளது.


இச் சர்வமத நடைபவனி சர்வதேச சத்திய சாய்பாவா நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்துள்ளது . மேலும் இவ் நடைபவனி நிகழ்வானது அக்கரைப்பற்று  ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் இருந்து ஆரம்பித்து அம்பாறை வீதியின் ஊடாக அக்கரைப்பற்று நகரின் வழியாக சாகாமம் பிரதான வீதி வழியாக மீண்டும் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியை அடைந்து அங்கு   உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மனிதனின் மேம்பாட்டிற்கு ஐம்பெரும் மனித விழுமியங்களான சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை மற்றும் அகிம்சை ஆகியவற்றினை கடைப்பிடிப்பதன்  மூலம் இனங்களிடையே  அன்பு, ஒற்றுமை மற்றம் சகிப்புத்தன்மை போன்றவற்றினை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
மேலும்  இதன் பபோது  சர்வமத தலைவர்களினால் மனித விழுமியங்கள் தொடர்பாக விழிப்புணர்வு சொற்பொழிவுகள்  இடம்பெறவுள்ளது.
 இந்நிகழ்வு கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் ஏற்கனவே iஇடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .
No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!