கிழக்கில் பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,


இதனடிப்படையில் மாகாண கல்வியமைச்சில் கல்வியமைச்சர்,கல்வியமைச்சின் செயலாளர்,பிரதம செயலாளர்,மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்ற கூட்டமொன்று இடம்பெறவுள்ளது,

இந்தக் கூட்டத்தின் போது பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான பொறிமுறைகுறித்து ஆராய்ந்து பாடங்களின் அடிப்படையில் எவ்வாறு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வது தொடர்பிலும் இதன் போது ஆராயப்படவுள்ளன.

முதற்கட்டமாக எத்தனை பட்டதாரிகளை இணைத்துக் கொள்வது மற்றும் விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் முதற்கட்டமாக எந்த எந்த பாடங்களுக்கு பட்டதாரிகளிடம் விண்ணப்பம் கோருவது என்பது தொடர்பிலும் இதன் போது தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக கட்டம் கட்டமாக பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,
அத்துடன் கிழக்கு முதலமைச்சரின் பணிப்புரைக்கமைய பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்காக கல்விப் பணிப்பாளரால் கடந்த சில நாட்களாக திரட்டப்பட்ட தரவுகள் நேற்று முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டதுடன் அதற்கமைவாகவே கிழக்கின் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இதனடிப்படையில் எதிர்வரும் நாட்களுள் பட்டதாரிகளுக்கான விண்ணப்பகங்கள் கோரப்படவுள்ளன, இதன் போது முடிந்தளவு அனைத்து பட்டதாரிகளையும் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன் போது பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான வயதெல்லையை 45 ஆக அதிகரிக்க அமைச்சரவையில் தீர்மானித்துள்ளதுடன் இதற்கு ஆளுனரின் அனுமதியை பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது,

அத்துடன் வெட்டுபுள்ளிகளை குறைத்து பட்டதாரிகளை உள்வாங்கவும் பட்டதாரிகளை உள்வாங்கியதன் பின்னர் குறித்த பாடங்களுக்கு மேலும் வெற்றிடங்கள் மீதமாயிருந்தால் அவர்களை பரீட்சையின்றி உள்வாங்கவும் நடவடிக்கையெடுக்க கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தீர்மானித்துள்ளார்,
முடிந்தளவு இலகுவாக பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பட்டதாரிகளின் விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்திரையாடியதுடன் அதன் போது அவர் இரண்டு வாரங்களில் இந்தப் பிரச்சினை தொடர்பில் சாதகமான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.
இதையடுத்து பிரதமரின் வாக்குறுதிக்கிணங்க கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி பிரதமரின் ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம் தலைமையில் கிழக்கு முதலமைச்சர்,கல்வியமைச்சர் மற்றும் மத்தியரசின் கல்வியமைச்சின்செயலாளர்,நிதி ஆணைக்குழுவின் செயலாளர்,தேசிய முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பல உயர் அதிகாரிகள் தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றது.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை இரண்டுவாரங்களுக்குள் வழங்குமாறு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு பிரதமரின் ஆலோசகர் இதன் போது பணிப்புரை விடுத்தார்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கல்விப் பணிப்பாளரினால் கிழக்குமாகாணத்தின் முழுமையான வெற்றிடங்கள் அடங்கிய ஆவணங்கள் தேசிய முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நிதி ஆணைக்குழுவுக்கு ஆகியவற்றுக்கு கையளிக்கப்பட்டன.

இதனையடுத்து கடந்த மே மாதம் 4 ஆம் திகதி தேசிய முகாமைத்துவ திணைக்களம் கிழக்கின் 4784 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அனுமதி வழங்கியமையை கிழக்கு மாகாண முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

நிதி ஆணைக்குழவின் அனுமதி தாமதமாகியமையையடுத்து முதலமைச்சர்களின் மாநாட்டில் ஜனாதிபதியை சந்தித்த கிழக்கு முதலமைச்சர் குறித்த நியமனங்களுக்கான நிதியை வழங்க ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார்,

Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!