4,,069 விஞ்ஞான பயிற்சி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

Share:
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு புதிதாக நான்காயிரத்து 69 விஞ்ஞான பயிற்சி ஆசிரியர்கள் இம்மாத இறுதியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் மூலம் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

ஆசிரிய பயிற்ச்சிக்கான கல்வி தலைமை ஆணையாளர் கே.எம்.எச் பண்டார இதுதொடர்பாக தெரிவிக்கையில் பாடசாலைகளில் நிலவும் தேசிய மற்றும் பிரதேச ரீதியிலான வெற்றிடங்கள் அடிப்படையில் இவர்கள் தெரிவிசெய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

ஏற்கனவே ஆசிரியர் பயிற்சியை பூர்த்தி செய்த மூவாயிரத்து 785 பேர் எதிர்வரும் ஜூலை மாதம் பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!