எதிர்வரும் 28ல் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் III பரீட்சை

Share:
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 111 இல் ஆட்களை இணைத்துக்கொள்வதற்கான பகிரங்க போட்டிப்பரீட்சை (2016-2017) இம்மாதம் 28ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த பரீட்சையில் 93ஆயிரத்து 952 பரீட்சார்த்திகளுக்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதிலுடுள்ள 658 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

அனைத்து பரீட்சார்த்திகளுக்குமான பரீட்சை அனுமதி அட்டை இம்மாதம் 16ம் திகதி தபாலில் சேர்க்கப்பட்டுள்ளது.

அனுமதி அட்டைகள் தொடர்பில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது விபரங்களிற்கு கீழ் கண்ட தொலைபேசியின் மூலம் திணைக்களத்தின் பரீட்சைகள் பிரிவு அல்லது வெளிநாட்டு பரீட்சைகள் கிளையுடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு 0112 785230 / 0112 177075 . உடனடித்தொலைபேசி இலக்கம் 1911 (இருபத்திநான்கு மணிநேரம்)

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!